21 ஆக., 2010

இந்திய எம்.பி.க்களின் சம்பளம் மூன்று மடங்கு உயர்வு

புதுடெல்லி,ஆக21:எம்.பி.க்களின் ஊதியத்தை 3 மடங்காக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களுக்கு மாதம்தோறும் இப்போது 16 ஆயிரம் அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. எம்.பி.க்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நீண்ட நாள்களாக பரிசீலிக்கப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் ஊதிய உயர்வு மசோதா தயாரிக்கப்பட்டது. இதில் எம்.பி.க்களின் அடிப்படை ஊதியத்தை ரூ16 ஆயிரத்திலிருந்து ரூ50 ஆயிரமாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது.

மத்திய அரசு துறை செயலர்களை விட கூடுதலாக எம்.பி.க்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்று நாடாளுமன்றக் கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இப்போது அரசுதுறை செயலர்கள் ரூ.80 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். ஆனால் எம்.பி.க்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

எம்.பி.க்களின் அலுவலகச் செலவுக்காக வழங்கப்பட்டு வந்த தொகை ரூ20 ஆயிரத்திலிருந்து ரூ40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொகுதிப் படி ரூ20 ஆயிரத்திலிருந்து ரூ40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

எம்.பி.க்கள் தனிப்பட்ட முறையில் வாகனம் வாங்குவதற்கு ரூ1.லட்சம் வரையில் வட்டியில்லாத கடன் வழங்கப்பட்டு வந்தது. இது ரூ4.லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாலை வழியாக எம்.பி.க்கள் வாகனங்களில் செல்லும் ஒரு கிலோமீட்டருக்கு ரூ13 வழங்கப்பட்டு வந்தது. இது ரூ16 ஆக அதிகரித்து வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்திய எம்.பி.க்களின் சம்பளம் மூன்று மடங்கு உயர்வு"

கருத்துரையிடுக