20 ஆக., 2010

தீவிரவாதக் குற்றச்சாட்டு: அல்தாஃப் நிரபராதி - நீதிமன்றம்

பீருமேடு(கேரளா),ஆக20:பயிற்சிப் பெற்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி என முத்திரைக்குத்தி போலீசாரும்,ஒரு பிரிவு செய்தி ஊடகங்களும் வேட்டையாடிய கஷ்மீரைச் சார்ந்த அப்பாவி இளைஞர் அல்தாஃபை நீதிமன்றம் நிரபராதி என விடுவித்துள்ளது.

ஜம்மு கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் லால்பஜாரைச் சார்ந்தவர் அல்தாஃப் அஹ்மத் கான்(வயது 32). இவர் கேரளமாநிலம் குமளியில் கைவினைப் பொருட்கள் வியாபாரம் செய்துவந்தார்.

கஷ்மீர் முஸ்லிம் என்றாலே நமது இந்திய காவல்துறையின் அகராதியில் தீவிரவாதி என்றல்லவா எழுதி வைத்துள்ளார்கள்.அதைப்போல் அல்தாஃபையும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 5 ம் தேதி கேரளமாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் இண்டலிஜன்ஸ் எஸ்.பியான எ.வி.ஜார்ஜின் தலைமையில் போலீசார் கைதுச் செய்தனர். இவர் மீது ஐ.பி.சி 468,471 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் பயிற்சிப் பெற்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி என்பது இவரைப் பற்றி போலீஸின் குற்றச்சாட்டு. காரணம், இவருடைய வசிப்பிடத்தை சோதனையிட்ட பொழுது போலியான அல்தாஃபின் போலி அடையாள அட்டையை கண்டெடுத்ததாகவும், இவர் மொபைல் ஃபோன் சிம் கார்டை போலியான பெயரில் வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த பீருமேடு ஜுடிஸியல் முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் போலீசார், அல்தாஃப் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரமில்லை எனவும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை எனவும், அல்தாஃப் தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க போலீசார் கஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்லவில்லை எனக்கூறி அல்தாஃபை நிரபராதி என விடுவித்துள்ளது.

பீருமேட்டைச் சார்ந்த வழக்கறிஞர் வர்கீஸ் அல்தாஃபிற்காக
வாதாடினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தீவிரவாதக் குற்றச்சாட்டு: அல்தாஃப் நிரபராதி - நீதிமன்றம்"

கருத்துரையிடுக