17 ஆக., 2010

மதரஸாக் கல்வித் திட்டங்களில் இடையூறு ஏற்படுத்தும் நோக்கம் இல்லை: கபில் சிபல்

புதுடெல்லி,ஆக17:மதரஸாக்களில் வழங்கப்படும் இஸ்லாம் சம்பந்தமான கல்விகளில் மாறுதல் ஏற்ப்படுத்தும் நோக்கம் இல்லை என மனித வள மேம்பாட்டுத் துறைக்கான மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

சிறுபான்மை மக்களால் நடத்தப்படும் மதரஸாக்கள் தரமான கல்வியையும் மேலும் சட்ட வரம்புகளுக்குள் உள்ள கல்வியையும் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

குழந்தைகளின் கல்விக்கான உரிமைகள், பட்டப்படிப்பு மற்றும் கட்டாயக் கல்வி திட்டதிற்கான 2009 ம் ஆண்டிற்க்கான சட்டத்தைப் பற்றி அவர் கூறுகையில்; "சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கான உத்திரவாதங்களை மீறாத வகையில் செயலாற்றும்படி மாநில மற்றும் யுனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களின் நிர்வாகக் குழுக்களால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளுக்கான உதவிகளை அளிப்பது இயற்கையானதே. அமைச்சகம் அதற்கான சில ஆலோசனைகளை ஏற்கனவே பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது" என்றும் அவர் கூறினார்.

கட்டாயக் கல்விக்கான சட்டத்தில் உள்ள சிக்கல்களைப் பற்றி பல பள்ளி நிர்வாகத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் மதரஸாக் கல்வி திட்டங்களில் இம்மாதிரியான சட்ட சிக்கல்கள் எதுவும் காணப்படவில்லை.

வெளிப்படையான நிர்வாக செயல்பாடுகளை காண்பிப்பதற்கும், கல்வித் துறையுடனான சந்திப்புகளில் பங்கெடுப்பதற்கும் பதிலாக பள்ளிகளில் சேர விரும்பவர்களுக்கான தடைகளைப் பற்றியும் பள்ளிகளுக்கான தரத்தினை அளிக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் இதன் மூலம் குழந்தைகளின் கல்விக்கு எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை என்பதை நிலைப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மதரஸாக் கல்வித் திட்டங்களில் இடையூறு ஏற்படுத்தும் நோக்கம் இல்லை: கபில் சிபல்"

கருத்துரையிடுக