6 ஆக., 2010

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்து பரிபூரணமான விசாரணை தேவை- சி.பி.எம்

புதுடெல்லி,ஆக6:ஹிந்த்துவா பயங்கரவாதம் தொடர்பான எல்லா வழக்குகளையும் முழுமையாக புலனாய்வு விசாரணைச் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடு எவ்வித பயங்கரவாதத்துடனும் விட்டுக்கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு பயங்கரவாதம் மற்றொரு பயங்கரவாதத்திற்கு வளமாக மாறிவிடும் என அக்கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவின் ஐக்கியத்திற்கும் பரந்தத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகும் என சி.பி.எம்மின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமோக்ரஸியின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரணைச்செய்து அதன் பின்னணியிலிலுள்ள முழு சதித்திட்டத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும்.

மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்த்துவா சதித்திட்டத்தை வெளிக்கொணர வேண்டுமெனவும் அப்பத்திரிகை வலியுறுத்துகிறது.

மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்து சில வாரங்களுக்கு பிறகு 11 ஹிந்த்துவா தீவிரவாதிகளை மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைதுச்செய்தனர். தீவிரவாதத்துடன் தொடர்புடைய ஹிந்த்துவாவாதிகளின் முதல் கைதாகும் அது.

ஆனால், கைதுச்செய்யப்பட்டவர்கள் தங்களின் உறுப்பினர்களல்ல எனக்கூறி தப்பிக்கப் பார்க்கிறது சங்க்பரிவாரம். எதிர்கால இந்தியாவின் ஜனநாயக-மதசார்பற்ற கட்டமைப்புகளில் ஹிந்த்துவா சித்தாந்தங்களுக்கு முக்கியத்துவம் பெறுவதற்கு நடக்கும் முயற்சிகளை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் பீப்பிள்ஸ் டெமோக்ரஸி அழைப்புவிடுத்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்து பரிபூரணமான விசாரணை தேவை- சி.பி.எம்"

கருத்துரையிடுக