ஆக,25:பருத்தி, பட்டு மற்றும் செயற்கை இழைகளால் துணிகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, தேயிலை செடி இழைகளால் துணி தயாரித்து விஞ்ஞானிகளும் டிசைன் வடிவமைப்பாளர்களும் சாதனை படைத்துள்ளனர்.
தேயிலை இழைகளை அரைத்து கூழ் போன்று தயாரித்தனர். அதில் சர்க்கரை மற்றும் சத்துப் பொருட்களுடன் பேக்டீரியாவை கலந்து பல நாட்கள் ஊறவைத்தனர். பின்னர் அதில் இருந்து நீளமான செல்லுலோஸ் இழைகளை பிரித்தெடுத்தனர். தேயிலை இலைகள் மற்றும் சர்க்கரை இந்த இழை நார்களை உருவாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிறகு, அவற்றை கொண்டு துணி தயாரித்தனர். அதை சட்டைகள், ஜாக்கெட்டுகள், மற்றும் பல வகையான உடைகளாக தைத்தனர். இது மட்டுமின்றி அந்த இழைகளை கொண்டு ஷீக்களையும் தயாரித்தனர்.
தேயிலை இழை நார்களால் தயாரிக்கப்பட்ட சட்டைகளுக்கு தேயிலை சட்டை என பெயரிட்டுள்ளனர். இது தோல் ஆடைகளை விட மிகவும் லேசான எடையுடன் உள்ளது. அணிவதற்கு மிகவும் மென்மையாக இருப்பதாகவும் ஆடை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்: on "பருத்தி ௦௦போன்று தேயிலை இழை நார்களிலும் துணி தயாரிப்பு"
கருத்துரையிடுக