ஜெருசலேம்,ஆக19:ஃபலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை நடத்த தயாராகவுள்ளோம். ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக எவ்வித முன்நிபந்தனையையும் ஏற்க மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
"ஃபலஸ்தீனத்துடன் நிரந்தரமான தீர்வை எட்டவே விரும்புகிறோம். இதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுடன் நேரடியான அமைதிப்பேச்சை தொடங்கவும் தயாராகவுள்ளோம். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி பேச்சுவார்த்தை தொடங்கும் பட்சத்தில் அதில் ஃபலஸ்தீனம் தனது கருத்துகளை வெளிப்படுத்தலாம். விவாதிக்கலாம்" என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
"நேரடிப் பேச்சுக்கு பல முறை விருப்பம் தெரிவித்தோம். ஆனால் அதையெல்லாம் ஃபலஸ்தீனம் பொருட்படுத்தவில்லை. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எங்களது அழைப்புக்கு மறுப்பு தெரிவித்து விலைமதிப்பற்ற நேரத்தை வீணடித்துவிட்டது." என்று நெதன்யாகுடன் சென்றுள்ள இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஃபலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான அமைதிப்பேச்சு கடந்த 2008-ல் தடைபட்டது.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை நீடித்து வருவதால் அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க முடியாத நிலை உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடிப் பேச்சை தொடங்குவதற்கான முயற்சியை அமெரிக்கா சமீபத்தில் மேற்கொண்டது. ஆனால் நேரடிப் பேச்சுக்கு ஃபலஸ்தீனம் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீனுடன் மீண்டும் அமைதிப்பேச்சு: முன்நிபந்தனையை ஏற்க முடியாது- இஸ்ரேல்"
கருத்துரையிடுக