29 ஆக., 2010

ஆஃப்கான் அரசில் ஏராளமானோர் சி.ஐ.ஏவின் சம்பளக்காரர்கள்

வாஷிங்டன்,ஆக29:ஆஃப்கான் அரசில் பணியாற்றும் ஒன்றிற்கும் மேற்பட்டோர் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவிடமிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என பெயர் குறிப்பிடப்படாத அதிகாரப்பூர்வ வட்டாரத்தை மேற்கோள்காட்டி அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டை உறுதிச்செய்வதற்கான ஒரு பகுதியாகத்தான் இந்த நடவடிக்கை என அமெரிக்க முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஃப்கான் அரசிற்கு அமெரிக்கா அழுத்தம் செலுத்திவரும் சூழலில்தான் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதிபர் கர்ஸாயியின் உதவியாளரும் தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவருமான முஹம்மத் ஷியா ஸலாஹி சி.ஐ.ஏவின் சம்பளப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என ஏற்கனவே நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

சி.ஐ.ஏ அமெரிக்காவின் விருப்பங்களை நிறைவேற்றவே செயல்படுகிறது. அமெரிக்காவின் நோக்கத்தை ஆப்கானில் சாதிக்க சி.ஐ.ஏ முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு எவரெல்லாம் உதவுகிறார்கள் என்பதனைக் குறித்த ஊகங்கள் ஆபத்தானதும் எதிர்விளைவை ஏற்படுத்தக் கூடியதுமாகும் என சி.ஐ.ஏவின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் கூறுகிறார்.

வருடக்கணக்காக சி.ஐ.ஏ ஆஃப்கான் அதிகாரிகளுக்கு பண உதவி அளித்து வருவதாக ஆப்கானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அலி ஜலாலி கூறியுள்ளார்.அதேவேளையில்,இத்தகைய குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத்திற்கெதிரான போரை தளர்வடையச் செய்யும் என அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கான் அரசில் ஏராளமானோர் சி.ஐ.ஏவின் சம்பளக்காரர்கள்"

கருத்துரையிடுக