5 ஆக., 2010

கேரள முதல்வர் தனது கூற்றை வாபஸ் பெறவேண்டும் சமூக-மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை

புதுடெல்லி,ஆக5:பணத்தைக் கொடுத்தும், திருமணம் புரிந்தும் கேரளாவை 20 ஆண்டுகளில் இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சி நடப்பதாக கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறிய அறிக்கையை உடனடியாக வாபஸ் பெறவேண்டுமென பிரபல மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான அருந்ததிராய் உள்ளிட்ட மனித உரிமை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் மத நல்லிணக்கத்தை ஆபத்தில் ஆழ்த்துவதுதான் முதல்வரின் அறிக்கை என இவர்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

கேரளாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர தேசிய மனித உரிமைக் கமிஷனும்,சிறுபான்மை கமிஷனும் தலையிட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

அருந்ததிராய்,டாக்டர் பி.டி.வர்மா, வரவர ராவ், சுமித் சக்ரவர்த்தி, ஜி.என்.சாயிபாபா, ராஜ் கிஷோர், டாக்டர்.மெஹர் என்ஜினியர், பேராசிரியர் ஹர் கோபால்,பேராசிரியர் மனோரஞ்சன் மெஹந்தி, சஞ்சய் காக், சரோஜ் கிரி, எஸ்.பிஸ்மில்லாஹ், சுனில் மண்டிவால், ரோணா வில்சன், ஸஃபருல் இஸ்லாம் கான், சிவ சுந்தர், நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ், ஆரிஸ் முஹம்மது, வி.டி.ராஜசேகர், நிகிலா ஹெண்ட்ரி, நாகரி பாப்பையா, ஜெ.தேவிகா, பேராசிரியர் டி.பி.விஜயகுமார்,டாக்டர்.எம்.எஸ்.ஜெயப்பிரகாஷ், இ.அபூபக்கர், வழக்கறிஞர்.கெ.பி.முஹம்மது ஷெரீஃப் ஆகியோர் அவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கேரள முதல்வரின் அறிக்கையை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சங்க்பரிவாரின் பிரச்சாரத்திற்கு உதவுவதுதான் இத்தகைய அறிக்கைகள். பேராசிரியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் காரணம் காட்டி கேரளாவில் குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் போலீஸ் நடத்தும் வரம்பு மீறல்கள் கவலைக்குரிய ஒன்றாகும்.

இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பான முறையில் கஸ்டடியில் வைத்தல், ரகசிய விசாரணை மையத்தில் வைத்து சித்திரவதைச் செய்தல், நடு இரவில் வீடுகளின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுதல், பெண்கள் உள்ளிட்டவர்களை மன ரீதியாகவும்,உடல்ரீதியாகவும் தொந்தரவுச் செய்தல் உள்ளிட்ட ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்தேறி வருகின்றன.

ஒருவரை போலீஸ் கஸ்டடியில் கொண்டு வரும்பொழுதும், கைதுச் செய்யப்படும் பொழுதும் சுப்ரீம் கோர்ட் கட்டளையிட்டுள்ள பேணவேண்டிய விதிமுறைகளை மீறியச் செயலாகும் இது.

தேசிய மனித உரிமை ஒருங்கிணைப்புக் கமிட்டியின் எர்ணாகுளம் மாவட்ட செயலாளர் என்.எம்.சித்தீக்கை,தேசிய மனித உரிமை கமிஷனுக்கு புகார் அளித்ததின் பெயரில் பொய்வழக்கில் சிக்கவைத்து சிறையிலடைத்துள்ளதாக மனித உரிமை சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரள முதல்வர் தனது கூற்றை வாபஸ் பெறவேண்டும் சமூக-மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை"

கருத்துரையிடுக