14 ஆக., 2010

குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக்கோரி அப்துல் நாஸர் மஃதனி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

பெங்களூர்,ஆக,14:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தனக்கு எதிராக பதிவுச் செய்துள்ள சதித்திட்டம் தீட்டிய வழக்கும், செண்ட்ரல் க்ரைம் ப்ராஞ்ச் தயாராக்கிய குற்றப்பத்திரிகையும் ரத்துச்செய்ய வேண்டும் எனக்கோரி பி.டி.பி.தலைவர் அப்துல்நாஸர் மஃதனி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சி.ஆர்.பி.ஸி 482-ன் படி வழக்கறிஞர் உஸ்மான் வழி அளித்துள்ள மனு மீது வரும் திங்கள்கிழமை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கும்.
மஃதனிக்கெதிராக ஆதாரங்கள் இல்லாமல் குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளதாகவும், நடக்கவியலாத சதித்திட்டம் குற்றஞ்சாட்டி பொய் வழக்கை க்ரைம் ப்ராஞ்ச் பதிவுச் செய்துள்ளது எனவும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

குடக் மாவட்டத்தில் லகாரி எஸ்டேட்டில் ரகசிய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கர்நாடக போலீஸ் குற்றஞ்சாட்டியுள்ளதில் மஃதனிக்கு பங்கில்லை என்பதை நிறுவ கேரள போலீசாரையும் கட்சியாக சேர்க்கவேண்டுமென்று மஃதனியின் வழக்கறிஞர் கோரியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் சிறை விடுதலைக்குப்பிறகு மஃதனி எங்கெல்லாம் சென்றார் என்பதுக் குறித்து கேரள போலீஸ் விவரங்கள் சேகரிக்கவேண்டும்.

மஃதனிக்கு கேரள போலீஸ் எவ்வித பாதுகாப்பை அளித்தது என்பதுக் குறித்து கர்நாடகா நீதிமன்றத்தை புரியவைக்க கேரள அரசை இவ்வழக்கில் கட்சியாக சேர்க்க வேண்டுமென்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

67-இல் சட்டவிரோத செயல்பாடுகள் தடைச்சட்டம் அப்துல் நாஸர் மஃதனி மீது சுமத்தப்பட்டுள்ளது அநீதி என அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு எதிராக இச்சட்டத்தை பிரயோகிக்கும் பொழுது கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முன் அனுமதியும் மஃதனி விவகாரத்தில் கர்நாடக போலீஸ் காற்றில் பறக்கவிட்டுள்ளது.

மத்திய அரசின் சட்டவிரோத செயல்பாட்டுத் தடைச்சட்டத்தின்படி ஒரு நபருக்கெதிராக வழக்குத்தொடர மத்திய அரசோ அல்லது மாநில அரசோ அனுமதி அளிக்கும் பொழுது அந்த நபருக்கெதிராக போதிய ஆதாரங்கள் உண்டா என்பதுக் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பரிசோதித்து அரசிற்கு சிபாரிசுச் செய்யவேண்டும். ஆனால், மஃதனிக்கெதிராக சட்டவிரோத செயல்படுகள் தடைச்சட்டம் பிரயோகிப்பதற்கு கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது கடைபிடிக்கவேண்டிய நிபந்தனைகளை மீறியாகும் என வழக்கறிஞர் உஸ்மான் அம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக்கோரி அப்துல் நாஸர் மஃதனி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்"

கருத்துரையிடுக