17 ஆக., 2010

ஹிஸ்புல்லாஹ் வெளிக்கொணர்ந்த உண்மைகளால் இஸ்ரேலின் விமான ஒப்பந்தத்திற்கு பின்னடைவு

பெய்ரூட்,ஆக17:இஸ்ரேலின் ஆளில்லா விமானங்களின் தகவல்களை கைப்பற்றியதாக ஹிஸ்புல்லாஹ் வெளிக்கொணர்ந்த உண்மைகள் பிரபல விமானங்களின் விற்பனையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்.

கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் ட்ரோன்கள் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானங்களின் போதாமையை வெளிக்கொணரும் உண்மைகளை வெளிப்படுத்தினார்.

1997 ஆம் ஆண்டு ட்ரோன்களிலிருந்து கைப்பற்றிய தகவல்கள் லெபனானின் கடலோர கிராமமான அத்ஸாரியாவில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்த உதவின என ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலிய ட்ரோன்கள் படம் பிடித்த லெபனான் பிரதமர் ரபீக் ஹரீரியின் பயண வழிகள் குறித்த வீடியோவையும் நஸ்ருல்லாஹ் பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.

இந்த வெளிக்கொணரல் இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான ட்ரோன் விற்பனை ஒப்பந்தத்தை பாதித்துள்ளதாக ஜெயின்ஸ் டிஃபன்ஸ் வீக்கிலியை மேற்கோள்காட்டி அல்மனார் டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலும்,ரஷ்யாவும் பலகோடி டாலர் மதிப்பிலான ட்ரோன் விமான ஒப்பந்தத்தைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிஸ்புல்லாஹ் வெளிக்கொணர்ந்த உண்மைகளால் இஸ்ரேலின் விமான ஒப்பந்தத்திற்கு பின்னடைவு"

கருத்துரையிடுக