2 ஆக., 2010

முஸ்லிம்களின் மிகப்பெரிய எதிரி ஒற்றுமையின்மையாகும்: சவூதி மன்னர்

மக்கா,ஆக2:முஸ்லிம்களின் மிகப்பெரிய எதிரி ஒற்றுமையின்மையாகும். முஸ்லிம் அறிஞர்கள் ஒற்றுமைக்காக உழைக்கவேண்டும் என சவூதி மன்னர் அப்துல்லாஹ் வேர்ல்ட் முஸ்லிம் லீக்கின்(ராபிதா) பொன்விழாவையொட்டி நடந்த சர்வதேச மாநாட்டில் உரை நிகழ்த்தினார். ஒற்றுமையின்மை வீழ்ச்சியின் துவக்கமாகும். முஸ்லிம்கள் பிரிவினையைக் குறித்து விழிப்புணர்வைப் பெற்று பரஸ்பரம் உறவை மேம்படுத்த வேண்டும்.

86 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மக்கா மாநாட்டில் மறைந்த மன்னர் அப்துல் அஜீஸ் நிகழ்த்திய உரையை மேற்கோள்காட்டி கூறினார் அப்துல்லாஹ்.

அப்துல்லாஹ்விற்காக சவூதி உள்துறை அமைச்சரும், துணை பிரதமருமான இளவரசர் நயீஃப் மாநாட்டை துவக்கி வைத்து உரையை வாசித்தார்.

ராபிதா சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். இவ்வமைப்பிற்கு நன்கொடைகள் வழங்கியுள்ள பிரமுகர்களுக்கு இளவரசர் பாராட்டினார்.

உலகின் பலபாகங்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகளைக் குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

1960 ஆம் ஆண்டு மன்னர் சவூதின் காலத்தில் துவக்கப்பட்ட ராபிதாவுக்கு சவூதி அரேபியா அரசு அளித்துவரும் ஆதரவுக் குறித்து ராபிதாவின் செயலாளர் ஜெனரல் அப்துல்லாஹ் அல் துர்க்கி நன்றி தெரிவித்தார்.

மூன்று தினங்கள் நடைபெறும் மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த முஸ்லிம் மார்க்க அறிஞர்களும், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் உள்ளிட்ட 400 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளில் ராபிதாவின் நன்கொடைகள், உலகில் அமைப்பின் நிலை, ராபிதாவின் இஸ்லாமிய விஷயங்கள், முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஆகியவற்றைக் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம்களின் மிகப்பெரிய எதிரி ஒற்றுமையின்மையாகும்: சவூதி மன்னர்"

கருத்துரையிடுக