இஃப்தார் அரசியல் பேரம் பேச உதவும் டின்னராக மாற்றியதில் சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள்தான் காரணம் என்பதை மறுக்கவியலாது.
இம்முறை தமிழகத்தில் விரைவில் தேர்தல் திருவிழா வரவிருப்பதால் இஃப்தார்கள் அரசியல் கட்சிகளால் கோலாகலமாக்கப்படுகின்றன. முஸ்லிம் விரோத பா.ஜ.கவும் கூட தங்களின் எச்சில்த் துண்டுகளை நம்பியிருக்கும் சில பெயர்தாங்கி முஸ்லிம்களை திருப்திப்படுத்த டெல்லியில் இஃப்தார் நடத்துகிறது.
இந்த இஃப்தார் கோலாகலம் இங்கு மட்டுமல்ல அமெரிக்காவின் வெள்ளைமாளிகையிலும் நடக்கத்தான் செய்கிறது. ஒரு புறம் முஸ்லிம் நாடுகளை இன்னும் சீரழிக்க கூடுதல் படைகளை அனுப்பி கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் காற்றில் பறத்திய அமெரிக்க அதிபர் ஒபாமா கூட தமது ஆதராவளர்களான முஸ்லிம்களை திருப்திப்படுத்த இஃப்தார் நிகழ்ச்சியை சாதகமாக பயன்படுத்தியுள்ளார். ஆக மொத்தத்தில் இஃப்தார் என்பது அரசியலில் சாதக பாதகங்களை நிர்ணயிக்கும் விருந்து உபாசாரமாக மாறிவிட்டது.
இஃப்தார் என்பது நோன்புடன் தொடர்புடையது. இறைவிசுவாசியான ஒரு முஸ்லிம் தன்னை இறையச்சமுடையவனாக மாற்ற முயலும் இறைவழிபாடு.இத்தகையதொரு உயர் வணக்கமான நோன்பு என்றழைக்கப்படும் விரதத்தை பகலின் இறுதிவேளையில் தண்ணீர் அல்லது உணவுவகைகளாலோ முடித்துக்கொள்வதே இஃப்தாராகும்.இது நம்பிக்கையாளர்களுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வாகும்.
ஒரு நோன்பாளியான மனிதருக்கு நோன்பு திறப்பதற்கு உதவினால் அவருடைய கூலிப்போன்றே நோன்பை திறக்க உதவியருக்கும் கிடைக்கும் ஆனால் நோன்பாளியின் கூலியில் எந்தவொரு குறைப்பாடும் ஏற்படாது என்பதுதான் இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் கற்றுத்தந்த பாடம்.
பிறரை திருப்திப்படுத்துவதோ,உலக ஆதாயங்களை அடிப்படையாகக் கொண்டதோ, தங்களது மகிழ்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் விருந்து உபசாரமோ அல்ல இஃப்தார்.
மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் இஃப்தாரை தவறாக பயன்படுத்தும் பொழுது அதன் நோக்கத்தை விளக்கிக் கொடுக்கவேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு உண்டு. ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால்?
விமர்சகன்
1 கருத்துகள்: on "இஃப்தார்கள்"
சபாஷ் சரியான சாட்டையடி. சமுதாய அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக