
லால்கரில் மம்தா நடத்திய பேரணியில் அவர் மாவோயிஸ்டு வேட்டைக்கெதிராக ஆற்றிய உரை குறித்து விளக்கம் அளிக்குமாறு மக்களைவையில் பா.ஜ.கவின் கோபிநாத் முண்டே கோரினார்.
மம்தாவின் உரையின் வெளிச்சத்தில் மத்திய அரசு மாவோ வேட்டையை தொடருமா என அவர் கேள்வி எழுப்பினார்.
மாவோயிஸ்டு தலைவர் ஆஸாதின் கொலைக்கெதிராக மம்தா நடத்திய விமர்சனம் வெட்கக்கேடானது என அவர் தெரிவித்தார்.
சி.பி.எம்.ல் பன்ஸகோபால் சவுதிரியும் மம்தாவுக்கெதிராக உரையாற்றினார். பேரணியில் மாவோயிஸ்டுகள் பங்கெடுத்ததுக் குறித்து மத்திய அரசு தமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த அவர் வலியுறுத்தினார். ஆனால், இப்பிரச்சனையில் அரசு ஏதேனும் முடிவு எடுக்குமுன்பு மம்தாவுடைய நிலைப்பாட்டைக் குறித்து ஆராய்வோம் என மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பா.ஜ.கவின் அருண் ஜெட்லி அரசுக்கெதிரான விமர்சனத்திற்கு தலைமைத் தாங்கினார். முன்னர், மாநிலங்களவை கூடியவுடன் ஒரு மணிநேரத்திற்கு ரகளையால் ஒத்திவைக்கப்பட்டது. மம்தாவின் செயல் அரசின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், அமைச்சரவையின் கூட்டு பொறுப்பை மீறியது என்றும் குற்றஞ்சாட்டிய ஜெட்லி, இச்சம்பவத்தில் மெளனம் சாதிக்கும் பிரதமரை கடும் விமர்சனம் செய்தார்.
அதே வேளையில்,திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் மம்தாவுக்கு ஆதரவாக பேசினர்.மக்களவையில் அக்கட்சியின் எம்.பி சுதீப் பந்தோபாத்தியாய எதிர்கட்சிகளின் எதிர்ப்புக் கணைகளை சந்தித்தார்.
லால்கர் பேரணியில் மம்தா பானர்ஜி எடுத்த நிலைப்பாடு, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்குரியது என்றும், கொலைகளுக்கும், தாக்குதல்களுக்கும் அவர் எதிரானவர் என்றும் அவர் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மம்தாவின் லால்கர் உரை:பாராளுமன்றத்தில் ரகளை"
கருத்துரையிடுக