29 ஆக., 2010

பின்லேடன் அமெரிக்க உளவாளி என ஃபிடல் காஸ்ட்ரோ

ஹவானா,ஆக29:அல்காயிதா தலைவர் எனக்கூறப்படும் உஸாமா பின் லேடன் சி.ஐ.ஏவின் சம்பளக்காரர் என க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.

தேவை ஏற்படும் பொழுதெல்லாம் அமெரிக்க அதிபராகயிருந்த ஜார்ஜ் புஷ் பின்லேடனை பயன்படுத்தியுள்ளார் எனக்கூறினார் ஃபிடல் காஸ்ட்ரோ.

லித்வேனியா நாட்டைச் சார்ந்த எழுத்தாளரான டானியல் எஸ்ட்டூலினுடனான நேர்முகத்தில்தான் காஸ்ட்ரோ இதனை தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்திடமிருந்து இத்தகவல் தனக்கு கிடைத்ததாக காஸ்ட்ரோ தெரிவிக்கிறார்.

ஜார்ஜ் புஷ்ஷிற்கு பின்லேடனின் உதவி கிடைத்துள்ளது.அவர்கள் சக பணியாளர்களாவர். எப்பொழுது புஷ்ஷிற்கு பீதியை ஏற்படுத்த வேண்டுமோ, அப்பொழுதெல்லாம் பின்லேடன் தான் நடத்தவிருக்கும் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கையுடன் தோன்றுவார் என நேர்முகம் தொடர்பாக க்யூபா கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான க்ரான்மாவில் வந்த செய்தியில் ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவிக்கிறார்.

அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டுவரும் விக்கிலீக்ஸ் பின்லேடன் உண்மையில் யார்? என்ற குறிப்பை வழங்கியுள்ளது. ஆனால் அதன் விளக்கத்தைக்கூற காஸ்ட்ரோ தயாராகவில்லை.

பில்ட்பெர்க் க்ளப் என்ற ரகசிய கூட்டணியைக் குறித்த 3 புத்தகங்களை எழுதியவர்தான் டானியல் எஸ்ட்டூலின் செப்டம்பர் 11க்குப் பிறகு வீடியோக்களில் தோன்றும் பின்லேடன் உண்மையான நபர் இல்லை எனவும் ஒரு மோசமான நடிகர் எனவும் எஸ்ட்டூலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பின்லேடன் அமெரிக்க உளவாளி என ஃபிடல் காஸ்ட்ரோ"

கருத்துரையிடுக