22 ஆக., 2010

விக்கிலீக் உரிமையாளர் மீது பாலியல் வன்புணர்ச்சி வழக்கு

ஸ்டாக்ஹோம்,ஆக22:சர்ச்சைக்குரிய ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவிற்கு தலைவலியாக மாறிய விக்கிலீக் இணையதளத்தின் உரிமையாளர் ஜூலியன் அஸாம்ஜெய் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டில்தான் ஜூலியனுக்கு எதிராக சித்திரவதை மற்றும் வன்புணர்வு வழக்கில் கைது வாரண்ட் வெளியிடப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஜூலியன் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

கடந்த வாரம் தான் அவர் ஸ்வீடன் வந்தார். விசாரணையின் ஒரு பகுதியாக கைது நடைபெறும் எனவும், குற்றஞ் சுமத்துவதுக் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் ஸ்வீடன் அரசுதரப்பு அதாரிட்டி செய்தித் தொடர்பாளர் கரீன் ரொஸால்டர் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கன் போர் ரகசியங்களை மேலும் வெளியிடுவதற்கு விக்கிலீக் தயாராகி வரும் வேளையில்தான் ஜூலியனுக்கு எதிராக இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஸ்வீடனில் சர்வர்கள் நிர்மாணித்துள்ள விக்கிலீக்கிற்கு முக்கிய சான்றிதழ்கள் பெறுவதற்குத்தான் ஜூலியன் அந்நாட்டிற்கு வருகை புரிந்தார். தகவல்களை உளவறிந்து வெளியிடுவதற்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கும் நாடுதான் ஸ்வீடன்.

ஆப்கான் போர் தொடர்பாக 76000 ராணுவ ஆவணங்களை ஏற்கனவே விக்கிலீக்ஸ் வெளியிட்டது அமெரிக்காவிற்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தியிருந்தது.

இத்தகைய கேவலமான விளையாட்டுகள் நடக்கும் என தாங்கள் ஏற்கனவே முன்னறிவிப்பு செய்திருந்தோம். அதன் முதல் கட்டம்தான் இது என விக்கிலீக்ஸ் ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக் உரிமையாளர் மீது பாலியல் வன்புணர்ச்சி வழக்கு"

கருத்துரையிடுக