புதுடெல்லி,ஆக,26:சர்ச்சைக்குரிய அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்த மசோதாவில் 18 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
"அணு விபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற 'உள்நோக்கத்துடன்' அணு உலை உபகரணங்கள் வழங்கும் நிறுவனங்களோ, ஊழியர்களோ செயல்பட்டிருந்தால்" என்ற வார்த்தைகள் மசோதாவில் இடம்பெற்றிருந்தன.
'உள்நோக்கத்துடன்' என்ற வார்த்தை வெளிநாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கவே எனக் கூறி எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து 'உள்நோக்கத்துடன்' என்ற வார்த்தை மசோதாவில் இருந்து நீக்கப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, அணு விபத்து நிகழும்பட்சத்தில் அணு உலை அமைக்கும் நிறுவனம் வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகை குறித்த உச்ச வரம்பும் நீக்கப்பட்டுள்ளது.
அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா 2010-ஐ மக்களவையில் தாக்கல் செய்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் பிரித்விராஜ் சவாண் பேசும்போது;"எதிர்க்கட்சிகள் கூறிய எல்லா திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு இந்த மசோதா முக்கியமானதாகும்.
விபத்து ஏற்படும்பட்சத்தில் வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகைக்கு உச்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இழப்பீட்டு ஆணையர் முடிவு செய்யும் தொகையை அணுஉலை அமைக்கும் நிறுவனம் வழங்க வேண்டும்" என்றார்.
மக்களவையில் 4 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பாஜக அளித்திருந்த ஆலோசனைகளை அரசு ஏற்றுக் கொண்டது. அதேசமயத்தில், இடதுசாரிகளின் ஆலோசனைகளை அரசு நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் எம்.பி. பாசுதேவ் ஆச்சார்யா கொண்டு வந்த திருத்தங்களுக்கு எதிராக 252 பேரும், ஆதரவாக 25 பேரும் வாக்களித்தனர்.

0 கருத்துகள்: on "அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதா மக்களவையில் நிறைவேற்௦றம்"
கருத்துரையிடுக