1 ஆக., 2010

சம்ஜவுதா வழக்கிற்கும் அஜ்மீர்,மாலேகோன் வழக்குகளுக்கும் தொடர்பா? தேசிய புலனாய்வு குழு விசாரணை

புதுடெல்லி,ஆக1:சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை விசாரிக்கும் தேசிய புலனாய்வு குழு(என்.ஐ.ஏ), இந்த தாக்குதலுக்கு பின்ணணியில் இருக்கும் முழு சதியையும், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிரா தீவிரவாத வழக்குகளில் கைதாகியிருக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள தொடர்பையும் கவனத்தில் மிகவிரைவில் வெளிக்கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான ஜூலை மாத அறிக்கையை கொடுத்துவிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்கையில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்,"ஹரியானா போலீஸால் இந்த விசாரணையில் முன்னேற முடியாத காரணத்தால் இவ்வழக்கை தேசிய புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது" என்றார்.

"சம்ஜவுதா குண்டுவெடிப்பில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் குழுவிற்கும், அஜ்மீர், மாலேகோன் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதையும் இந்த விசாரணையில் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார்.

"அஜ்மீர், மக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகோன் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்களுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் தேசிய புலனாய்வு குழு விசாரணை செய்யும்" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சம்ஜவுதா வழக்கிற்கும் அஜ்மீர்,மாலேகோன் வழக்குகளுக்கும் தொடர்பா? தேசிய புலனாய்வு குழு விசாரணை"

கருத்துரையிடுக