கொல்லம்,ஆக11:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக ஜோடிக்கப்பட்டுள்ள கேரள பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை கைது செய்ய கர்நாடகா போலீசார் கொல்லம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
பெங்களூர் செண்ட்ரல் க்ரைம் ப்ராஞ்ச் சிறப்பு விசாரணை குழுவில் சி.ஐ.சித்தப்பாவின் தலைமையில் நான்கு போலீசார் இதில் அடங்குவர்.
கொல்லம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்த போலீசார் அம்மாவட்ட எஸ்.பி ஹர்ஷிதாவை சந்தித்தனர். பின்னர் அப்துல் நாஸர் மஃதனியை கைது செய்வதற்குரிய உதவியை வேண்டியவர்கள், பெங்களூர் மாநகர கமிஷனர் சங்கர் பதரியின் கடிதத்தை எஸ்.பியிடம் அளித்தனர்.
கர்நாடகா போலீசாருக்கு எல்லாவித உதவிகளும் அளிக்கப்படும் எனவும், எந்நேரத்திலும் மஃதனி கைது செய்யப்படலாம் எனவும் எஸ்.பி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
மஃதனி கைது செய்யப்படுவார் என்பதை அறிந்து நூற்றுக்கணக்கான பி.டி.பி தொண்டர்கள் மஃதனி வசிக்கும் அன்வாருச்சேரியில் கூடினர்.
இதற்கிடையே,ஒரு தொண்டர் அன்வாருச்சேரியில் ஒரு கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனியை கைது செய்ய கர்நாடகா போலீஸ் கேரளாவில்"
கருத்துரையிடுக