15 ஆக., 2010

இஸ்ரேலின் கொடூரங்களுக்கு எதிராக யூத புரோகிதர்

வாஷிங்டன்,ஆக15:ஃபலஸ்தீனில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் யூதப்புரோகிதர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் இர்னா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சியோனிஸ எதிர்ப்பு பிரச்சாரகரான யூதபுரோகிதர் டேவிட் ஃபெல்ட்மான் கூறியதாவது: "இஸ்ரேல் ஒருபோதும் யூதமக்களின் பிரதிநிதியல்ல. ஃபலஸ்தீனர்களுக்கெதிரான தாக்குதலுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் எதிர்ப்பை தெரிவிக்க எங்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.

இஸ்ரேல யூத மதத்திற்கு எதிரான நாடு என்பதுக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.

காஸ்ஸாவில் 15 லட்சம் மக்களை துயரத்தில் ஆழ்த்திய தடையை இஸ்ரேல் நீக்கவேண்டும். யூதப் புரோகிதர்கள் எப்பொழுதும் இஸ்ரேலின் கொடூர நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள்.இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியானவர்களின் படங்களை உயர்த்திப்பிடித்துக் கொண்டு இஸ்ரேலுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடுவோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இவருடைய அமைப்பு அமெரிக்காவிலும், கனடாவிலும் கண்டன போராட்டம் நடத்தியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் கொடூரங்களுக்கு எதிராக யூத புரோகிதர்"

கருத்துரையிடுக