31 ஆக., 2010

காவி பயங்கரவாதம் பற்றிய பேச்சு: ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு

அகமதாபாத்,ஆக31:காவி பயங்கரவாத பேச்சு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது திங்கள்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார்.

ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காவி பயங்கரவாதம் பற்றிய பேச்சு: ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு"

கருத்துரையிடுக