23 ஆக., 2010

கஷ்மீர்:போராட்டக்காரர்களுக்கு இனி ப்ளாஸ்டிக் குண்டுகள்

ஸ்ரீநகர்,ஆக23:கஷ்மீரில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது கடும் பல பிரயோகிக்கும் ஜம்மு-கஷ்மீர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃபின் செயல் விவாதத்தை கிளப்பியிருக்கவே பெருமளவில் ஆனால் உயிரை பறிக்காத வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டு ஆயுதங்களை பயன்படுத்த போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ப்ளாஸ்டிக் குண்டுகளை பயன்படுத்தும் துப்பாக்கிகளும், சிறிய துப்பாக்கியான பம்ப் ஆக்‌ஷன் துப்பாக்கிகளும் போலீசாருக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் கூட காயத்தை ஏற்படுத்தக்கூடியது புதிய ஆயுதங்கள்.முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கையை ஏற்றுத்தான் மத்திய அரசு அவசர நடவடிக்கையை மேற்கொண்டு புதிய ஆயுதங்களை போலீசாருக்கு கிடைக்க வழி வகுத்துள்ளது.

போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கஷ்மீர் மக்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்துதான் உமர் அப்துல்லாஹ் மத்திய அரசிடம் அவசர நடவடிக்கை மேற்கொள்ள கோரினார்.

இதனைத் தொடர்ந்து ஜபல்பூரில் ஆயுத நிர்மாண தொழிற்சாலையில் புதிய வகை ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. புதிய ஆயுதம் பயன்படுத்தும் பொழுது உயிரிழப்பை அதிக அளவில் குறைக்கலாம் என மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:போராட்டக்காரர்களுக்கு இனி ப்ளாஸ்டிக் குண்டுகள்"

கருத்துரையிடுக