புதுடெல்லி,ஆக.10:அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்கு தகவல் தெரிவிப்பவர்களை பாதுகாக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்கு தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய அடையாளங்களை வெளியில் தெரிவிப்பவர்களை தண்டிக்கவும், சிவில் நீதிமன்றத்திற்கு ஈடான அதிகாரத்தை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அளிக்கவும் இச்சட்ட மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தகவல் தெரிவித்ததன் காரணமாக, அவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதையோ அல்லது பழி வாங்கும் நடவடிக்கை மேற்கொள்வதையோ தடுக்க இச்சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மசோதாவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

0 கருத்துகள்: on "ஊழல்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களை பாதுகாக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்"
கருத்துரையிடுக