கொல்லம்,ஆக17:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல்நாஸர் மஃதனியை இன்று கைதுச் செய்ய போலீஸ் தீர்மானித்துள்ளது.
தெற்கு மாகாண ஐ.ஜி எ.ஹேமச்சந்திரன் மற்றும் பெங்களூர் மாநகர போலீஸ் துணைக்கமிஷனர் அலோக் குமார் ஆகியோர் கேரள டி.ஜி.பி ஜேக்கப் புனூஸுடன் நடத்திய சந்திப்பில் இது முடிவானது.
மஃதனி இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் என்ற தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் தலைநகரில் நடந்தது.
மஃதனியை இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கர்நாடகா அரசு நிர்பந்தித்தைத் தொடர்ந்து கேரள மாநில போலீசார் நடவடிக்கைகளை துரிதகதியில் செயல்படுத்த துவங்கியுள்ளனர்.
நேற்று மஃதனியை ஆறு பேர் கொண்ட மருத்துவக்குழு பரிசோதித்தது. அவருக்கு காய்ச்சலும், இருமலும் உள்ளதாகவும், இதர உடல் நிலை திருப்திகரமாக உள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனி இன்று கைதாகிறார்"
கருத்துரையிடுக