4 செப்., 2010

2020 க்குள் அதிக சக்திவாய்ந்த ஹைட்ஜன் அணு உலை: ஈரான் அறிவிப்பு

டெஹ்ரான்,செப்.4:2020ஆம் ஆண்டிற்குள் அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் அணு உலையை (Fusion Reactor) வடிவமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அணுக் கருக்குகள் ஒன்றிணைந்து பிறகு ஒரு நேரத்தில் வெடித்து வெளியிடும் பன்மடங்குச் சக்தியை அடிப்படையாகக் கொண்டது ஹைட்ரஜன் அணு சக்தியாகு்ம். பொதுவாக அணு ஆயுதங்களைத் தயாரிக்க மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் இந்த அடிப்படையைக் கொண்டு, அணு மின் தயாரிப்பை செய்யும் அணு உலையை வடிவமைக்க ஈரான் முடிவு செய்திருப்பது அறிவியல், தொழில் நுட்ப ரீதியான பெரும் சவாலான இலக்காகும்.

ஹைட்ஜன் அணு சக்தி ஆய்வில் ஈடுபட்டுவரும் ஈரான் அமைப்பின் தலைவரான அஸ்கார் சேதிக்ஜாடே இதனைத் தெரிவித்ததாக இஸ்னா என்றழைக்கப்படும் ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை நிறைவேற்றிட 100 தொழில்நுட்ப வல்லுனர்களை பணியில் சேர்க்கப்போவதாகவும் அஸ்கார் தெரிவித்துள்ளார் என்று அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "2020 க்குள் அதிக சக்திவாய்ந்த ஹைட்ஜன் அணு உலை: ஈரான் அறிவிப்பு"

கருத்துரையிடுக