6 செப்., 2010

தர்ஃபூரில் கடும் மோதல்: 43 பேர் படுகொலை

கார்த்தூம்,செப்.6:சூடான் நாட்டின் தர்ஃபூரில் அகதிகள் முகாமிலும் இதர பகுதிகளிலும் நடந்த தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு தர்ஃபூரில் ஹமீதியா முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை நடு இரவிலும், சனிக்கிழமை காலையிலும் பல்வேறு குழுக்களுக்கிடையே மோதல் நிகழ்ந்தது.

வெள்ளிக்கிழமை நடந்த மோதலில் 37.பேர் கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று 6 பேர் கொல்லப்பட்டனர். 33 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனை ஐ.நா துயர் துடைப்புப்பணி செய்தித்தொடர்பாளர் கிறிஸ் சிக்மானிக் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அரசு ஆதரவுக் குழுவான பழங்குடியினர் பிரிவுதான் தாக்குதலில் ஈடுபட்டதாக எதிர் குழுவின் தலைவர் இப்ராஹீம் அல் ஹெல்வ் தெரிவிக்கிறார்.

தர்ஃபூர் முகாம்களை ஆயுதமில்லாத இடமாக மாற்ற வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வலியுறுத்தியிருந்தது.

ஐ.நா சமாதான பணியாளர்கள் அகதிகள் முகாம் செல்ல இயலவில்லை. பாலைவனப் பகுதியான தர்ஃபூரினை அரசு புறக்கணிப்பதாகக் கூறி 2003 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தினர்.கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.27.லட்சம் பேர் அகதிகளானாதாக ஐ.நா கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தர்ஃபூரில் கடும் மோதல்: 43 பேர் படுகொலை"

கருத்துரையிடுக