இஸ்லாமாபாத்,செப்.4:வடமேற்கு நகரமான குவட்டாவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடத்திய குத்ஸ் தின பேரணியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மீஸான் சவுக் என்ற பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் 100 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவுத் தெரிவித்தவாறு ஷியா பிரிவைச் சார்ந்த முஸ்லிம் மாணவர்கள் இப்பேரணிக்கு ஏற்பாடுச் செய்திருந்தனர்.
இப்பேரணி மீஸான் சவுக் பகுதிக்கு வந்தபொழுது குண்டுகளை கட்டியவர் சுயமாக வெடித்துச் சிதறியதில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கருதப்படுகிறது.
ஒரு தொலைக்காட்சி சேனலின் டிரைவர் கொல்லப்பட்டு பல்வேறு சேனல்களின் செய்தியாளர்களும், கேமரா மேன்களும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர். பேரணியில் பங்கேற்ற ஆயுதம் தாங்கிய மாணவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இந்த வாரம் ஷியாக்களுக்கெதிராக நடைபெற்ற இரண்டாவது தாக்குதலாகும். கடந்த புதன்கிழமை லாகூரில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
ஈரானின் புரட்சித் தலைவர் இமாம் கொமைனி விடுத்த வேண்டுகோளின்படி உலகமெங்கும் ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமையை முஸ்லிம்கள் குத்ஸ் தினமாக கடைப்பிடிக்கின்றனர்.
பொது இடத்தில் நிகழ்ச்சியை நடத்தாதீர்கள் என நேற்று முன் தினம் பாக்.உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ஷியா பிரிவினரிடம் கூறியிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் ஊர்வலத்தில் தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் மரணம்"
கருத்துரையிடுக