19 செப்., 2010

பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள்: ஐ.நா சர்வே தகவல்

ஐ.நா,செப்.19:உலகம் முழுக்க எத்தனை பேர் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள் என்று ஐ.நா. திட்டக்குழு சார்பில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று அந்த சர்வே தகவலில் கூறப்பட்டுள்ளது. உலகில் பட்டினியால் தவிக்கும் இரண்டில் ஒருவர் இந்தியர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

அது போல இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிய ஊட்டசத்து கிடைப்பது இல்லை. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை சரியான உணவு கிடைக்காமல் வளர்வதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.

இந்தியா அறிவியல், மருத்துவத் துறைகளில் வளர்ந்து விட்டதாக கூறுகின்ற போதிலும் சுகாதாரம் முழுமையாக இல்லை என்று ஐ.நா. சர்வேயில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பிரசவத்தின் போது உயிரிழக்கும் பெண்கள் விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைபெறும் போது லட்சத்தில் 254 பெண்கள் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களில் அதிக பெண்கள் உயிரிழப்பதாக சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள்: ஐ.நா சர்வே தகவல்"

கருத்துரையிடுக