புல்பானி,செப்.26:கந்தமால் கலவர சம்பவம் தொடர்பான வழக்கில் 8 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரிஸ்ஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் 2008-ல் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது மெகுபாலி கிராமத்தில் சிறுபான்மையினர் வீடுகளை எரித்தது தொடர்பான வழக்கு புல்பாணி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எஸ்.கே.தாஸ் விசாரித்து, 8 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அவர்கள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் 24 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் போதிய ஆதாரம் இல்லாததால் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்: on "ஒரிஸ்ஸா:கந்தமால் கலவர வழக்கு: 8 பேருக்கு சிறை"
கருத்துரையிடுக