1 செப்., 2010

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இஸ்ரேலே பொறுப்பு: அப்பாஸ்

மேற்குகரை,செப்.1:வாஷிங்டனில் வருகிற வியாழக்கிழமை நடக்கவிருக்கும் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவினால் அதற்கான முழுப்பொறுப்பும் இஸ்ரேலாகும் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளார்.

ஃபலஸ்தீன் மக்களிடம் ஆற்றிய உரையில் அப்பாஸ் இதனை தெரிவித்தார்.

"ஃபலஸ்தீன் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தொடர்வது நேரடியான பேச்சுவார்த்தையை பாதிக்கும். 1967 முதல் நடத்திவரும் குடியேற்ற நிர்மாணங்களை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலின் தலைமைக்கு இயலும் என எதிர்பார்க்கிறேன்.

சுதந்திர ஃபலஸ்தீனுக்கு குறைந்த ஒன்றையும் அங்கீகரிக்கமாட்டோம். இந்த நோக்கத்தில் அரபு சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

எல்லை, குடியேற்றம், பாதுகாப்பு, இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஃபலஸ்தீனர்கள் உள்ளிட்ட விஷயங்களை பேச்சுவார்த்தையில் உட்படுத்தாமல் காலம் கடத்தும் இஸ்ரேலின் தந்திரம் பலிக்காது.

சுதந்திரத்திற்காக தாகிக்கும் உலகத்தின் மிக பழக்கமுடைய சமூகம்தான் ஃபலஸ்தீனர்கள். ஆதலால், எங்களுடைய கோரிக்கை நியாயமானது என்ற விழிப்புணர்வோடுதான் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்கிறோம்." இவ்வாறு அப்பாஸ் உரை நிகழ்த்தினார்.

அமெரிக்கா மத்தியஸ்தராக பங்கெடுக்கும் இப்பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்பட இரு நாடுகளின் இதர முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பர் எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இஸ்ரேலே பொறுப்பு: அப்பாஸ்"

கருத்துரையிடுக