6 செப்., 2010

பிணைக்கைதிகளை விடுவித்ததாக மாவோயிஸ்டுகள்: தகவல் இல்லை என அரசு

பாட்னா,செப்.6:பீகார் மாநிலத்தில் தாங்கள் கடத்திச் சென்ற 3 போலீஸ்காரர்களை விடுவித்ததாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். ஆனால், பிணைக்கைதிகள் விடுவித்ததுத் தொடர்பான தகவல் ஒன்றும் இல்லை எனவும், அவர்களை தேடும் தீவிரமாக தொடர்கிறது எனவும் பீகார் மாநில அரசு கூறியுள்ளது.

பிணைக்கைதிகளை விடுவித்ததுத் தொடர்பாக தனக்கு ஒரு விபரமும் கிடைக்கவில்லை என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவிக்கிறார்.

கடத்திச்சென்ற போலீஸ்காரர்களில் ஒருவரை நேற்று முன் தினம் மாவோயிஸ்டுகள் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று காலை 3 பேரையும் விடுவித்ததாக மாவோயிஸ்ட் தலைவர் அவினாஷ் உள்ளூர் பத்திரிகைகளுக்கு செய்தியை அளித்தார்.

பாங்கா-ஜமுவி எல்லையில் அமைந்துள்ள பெல்ஹர் கிராமத்தில் இவர்கள் 3 பேரையும் விடுவித்ததாக அவினாஷ் கூறியிருந்தார். ஆனால், பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து நடத்திய தேடுதலில் மாவோயிஸ்டுகள் விடுவித்ததாக கூறிய நேரத்தைவிட அதிக நேரம் கழிந்த பிறகும் 3 போலீஸ்காரர்களையும் கண்டுபிடிக்க இயலவில்லை என எ.டி.ஜி.பி பி.கே.தாக்கூர் தெரிவிக்கிறார்.

பத்திரிகைச் செய்திகளை தாங்கள் நம்புவதில்லை என்றும், தேடுதல் பணியை தீவிரமாகத் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி என சுயமாக அறிமுகப்படுத்தும் ஒரு நபர் பிணைக்கைதிகளாக பிடித்த போலீஸ்காரர் அபய்பிரசாத்தின் வீட்டினரை சந்திப்பதும், பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிப்போம் என கிஷன்ஜி என்பவர் உறுதிக் கூறுவதுமான காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று வெளியிட்டது.

இதில் அபய்பிரசாத்தின் மனைவி ரஜனி கிஷன்ஜியின் கையில் ராக்கிக்கெட்டும் காட்சியும் அடங்கியுள்ளது.

ருபேஷ்குமார் சின்ஹா, முஹம்மது இஹ்ஸான், அபய் யாதவ், லூக்காஸ் டீட்டா ஆகியோரை கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். இதில் கொல்லப்பட்ட டீட்டாவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிணைக்கைதிகளை விடுவித்ததாக மாவோயிஸ்டுகள்: தகவல் இல்லை என அரசு"

கருத்துரையிடுக