தெஹ்ரான்,செப்.9:ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயுக் கொண்டுவருவதற்கான திட்டத்திலிருந்து பின்வாங்கிய இந்தியா மீண்டும் இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறது.
கடல்வழியான பைப்லைன் என்ற கொள்கையை ஒரு வருடத்திற்கு பிறகு இந்தியா முன்வைத்துள்ளது.
சர்வதேச கம்பெனி மூலமாக பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க இந்தியா விரும்புவதாக ஈரானின் எண்ணை விவகார துணை அமைச்சரும்,தேசிய எரிவாயு நிறுவன எம்.டியுமான ஜவாத் அவ்ஜி தெரிவிக்கிறார்.
பேச்சுவார்த்தையின் தேதி முடிவாகவில்லையெனினும்,பெரும்பாலும் ரமலானுக்கு பிறகு தொடங்கலாம் எனக் கருதப்படுகிறது.
இயற்கை எரிவாயு எவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவது என்பது இதுவரை முடிவாகவில்லை. பாகிஸ்தான் வழி மற்றும் கடல்வழி ஆகிய இரு வழிகளே உள்ளன என அமைச்சர் மெஹர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
'சமாதான பைப்லைன்' என்ற இத்திட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பை வரவேற்பதாக ஈரானின் வெளியுறவு விவகாரத்துறை இணை அமைச்சர் முஹம்மது அலி ஃபத்ஹுலாஹி தெரிவிக்கிறார்.
2014 முதல் 212 லட்சம் க்யூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு ஒவ்வொரு தினமும் பைப்லைன் வழியாக ஈரானிலிருந்து ஏற்றுமதிச் செய்யும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கடந்த ஆண்டு கையெழுத்திட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈரானிலிருந்து கடல் மூலம் எரிவாயு கொண்டுவர இந்தியா திட்டம்"
கருத்துரையிடுக