27 செப்., 2010

முஆமியா அபூஜமாலின் மரணத்தண்டனை மீளாய்வு

வாஷிங்டன்,செப்.27:கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய முஆமியா அபூஜமாலின் மரணத்தண்டனைக் குறித்த மீளாய்வுக்காக புதிய விசாரணையை மேற்கொள்ள அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு போலீஸ் அதிகாரியைக் கொன்ற குற்றத்திற்காக முஆமியா அபூ ஜமாலுக்கு 1982 ஆம் ஆண்டு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஃபிலடெல்ஃபியா அசோசியேசன் ஆஃப் ப்ளாக் ஜெர்னலிஸ்ட்ஸ் என்ற அமைப்பின் தலைவராக பணிபுரிந்த முஆமியா அபூ ஜமால் ஒரு ரேடியோ அறிவிப்பாளர் ஆவார். தான் நிரபராதி என்பதை சுட்டிக்காடி அபூஜமால் அப்பீல் செய்திருந்தார். தனது கைது மற்றும் 28 ஆண்டுகள் விசாரணை ஆகியவற்றிற்கிடையே நடந்த பாரபட்சம், போலீஸின் கொடூரம், வழக்கறிஞரின் வீழ்ச்சிகள் ஆகியவற்றை அபூஜமால் அப்பீலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இன வேறுபாட்டிற்கும்,போலீசின் கொடுமைகளுக்குமெதிராக தீவிரமாக போராடியவர் அபூஜமால். அரசியல் நிலைப்பாடுகளை வெளிச்சம் போட்டி காட்டியவர்.

பென்சில்வானியா சிறையில் மரணத்தண்டனையை எதிர்பார்த்திருக்கும் முஆமியா அபூ ஜமால் சிறையில் வைத்து ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத்தண்டனையைக் குறித்து ப்ரஸன்ரேடியோ.ஆர்க் என்ற இணையதளம் வழியாக இந்த எதிர்ப்பை தொடர்கிறார்.

முஆமியாவின் சர்ச்சைக்குரிய விசாரணை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா, ஆம்னஸ்டி இண்டர்நேசனல், ஃப்ரீ முஆமியா அபூஜமால் கோஅலிஷன், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரபல நடிகர்கள் ஆகியோர் முஆமியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஆமியா அபூஜமாலின் மரணத்தண்டனை மீளாய்வு"

கருத்துரையிடுக