வாஷிங்டன்,செப்.26: செப்.11 தாக்குதலைக் குறித்த ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதின் உரை வெறுப்பையும், அவமதிப்பையும் தோற்றுவிப்பது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பி.பி.சியின் பாரசீக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் அவர். செப்.11 தாக்குதல் அமெரிக்காவின் உருவாக்கம் என்பதனை அமெரிக்காவிலேயே பெரும்பாலானோர் கருதுவதாக வியாழக்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரை நிகழ்த்தியிருந்தார் நஜாத்.
செப்.11 தாக்குதலில் கொல்லப்பட்டோர்களில் பெரும்பாலோர் நியூயார்க்கைச் சார்ந்தவர்களாகயிருக்கும் சூழலில் அங்கு வைத்தே இத்தகையதொரு உரையை நிகழ்த்தியது பொறுக்க முடியாதது என ஒபாமா கூறினார்.
அதேவேளையில் நஜாத் தனது உரையை நியாயப்படுத்துகிறார். இச்சம்பவத்தைக் குறித்து புலனாய்வை மேற்கொண்டால் உண்மை வெளிவரும் என அவர் தெரிவித்தார்.
"நான் தீர்ப்பை வழங்கவில்லை. ஐ.நா உண்மைக் கண்டறியும் கமிட்டிக்கு இவ்விவகாரத்தில் உண்மை தெரியும் வாய்ப்பு ஏற்படும். யார் இந்த தாக்குதலுக்கு காரணம்?, அல்காயிதா என்பது என்ன?, அது எங்கே உள்ளது? அதனை ஆதரிப்பது யார்? என்பது விசாரணையில் தெரியவரும்." என்று கூறினார் நஜாத்.
செப்.11 தாக்குதல் குறித்து ஐ.நாவின் உண்மைக் கண்டறியும் கமிட்டி விசாரணை மேற்கொள்ளவேண்டும் என ஐ.நா பொதுச்சபையில் ஆற்றிய உரையின்பொழுது கோரியிருந்தார் நஜாத்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "நஜாதின் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஒபாமா"
கருத்துரையிடுக