28 செப்., 2010

அச்சமும் பதட்டமும் முன்னே -நீதிமன்றத் தீர்ப்பு வரும் பின்னே- பாதுகாப்பற்ற இந்தியா

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு நீதி மன்றத் தீர்ப்புக்காக இப்படியொரு எதிர்பார்ப்பும் பதற்றமும் இதற்கு முன் இருந்தது இல்லை.

பாபரி மசூதி இட விவகாரத்தில் அலகபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாட்டின் அனைவரின் கவனமும் செப்டம்பர்24 னை நோக்கி திரும்பி இருந்தது.
தீர்ப்புக்கு முன்னதாகவே ஒரு அசாதரணமான பதட்ட நிலைகள் நாடு முழுவதும் பரவிவருகிறது. அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற அச்ச நிலையில் மக்கள் உறைந்து உள்ளனர். நாட்டின் பெரும் அரசியல் இயக்கங்களிலிருந்து சிறு மக்கள் அமைப்புகள் வரை வெளி வர இருக்கும் தீர்ப்பின் பாதக சாதகமான நிலையை கருத்தில் கொண்டு எந்த ஒரு பிரிவினரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

மனித வேட்டை நரபலி நரேந்திரமோடி கூட குஜராத் மக்களுக்கு விடுத்த அறிக்கையில் மக்கள் அனைவரும் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். (இது எதற்கான முன்னறிவிப்பு என்பது மட்டும் தெரியவில்லை).

பிஜேபி ஆளும் கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கூட முன்னதாகவே விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மாநில மத்திய அரசாங்கள் பல அடுக்கு பாதுகாப்பினை நாடு முழுவதும் அமல்படுத்திவருவதும், காவல் அணிவகுப்புகளை ஆங்காங்கே நடத்தி வருவதும், பிரதமர் உட்பட பல முக்கிய அமைச்சர்கள் அறிவிக்கும் செய்திகளும், பத்திரிக்கை தொலைக்காட்சி செய்திகளும் மக்களை பெரும் அச்சத்திலும் பதற்றத்தையும் எதிர் நோக்கி இருக்க செய்துள்ளது.

மேலும் உளவுத்துறைகளின் தீவிரவாத அச்சுறுத்தல் முன்னறிவிப்பின் காரணமாக பெரும்பான்மையான உலக நாடுகள் கூட தனது நாட்டு மக்களையும் விளையாட்டு வீரர்களையும் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிற்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தீர்ப்பினை ஒட்டி மொத்தமாக அனுப்பபடும் அலைபேசி குறுஞ்செய்திகளையும் 3 நாட்களுக்கு தடை செய்தது, மேலும் விரோதம் வளர்க்கும் பேச்சுக்களும் எழுத்துக்களும் தடை செய்யப்பட்டிருந்தது.

பதட்டம் கொஞ்சம் தணியும் விதமாக நீதிமன்றத் தீர்ப்பு சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது கொஞ்சம் நிம்மதியுடன் மக்களை தெருக்களில் நடமாட அனுமதித்துள்ளது.
இத்தனை பேரச்சமும் பெரும் பதற்றமும் ஏன் ஆளும் அரசாங்கத்தாலும், ஊடகங்களாலும் திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுகிறது? உண்மையில் இந்த பேரச்சநிலை இந்திய சமுக கட்டமைப்பில் யார் மூலம் உருவாகியுள்ளது?

நீதி மன்றத்தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஒரு இஸ்லாமியன் கூட நீதி மன்றத் தீர்ப்பை எதிர்ப்போம் என கூறியது இல்லை.

இப்படி இருக்கையில் பிறகு யார் மூலம் தான் இந்த தீர்ப்பினால் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் இருக்க கூடும்?.

தீர்ப்பு நிச்சயமாக பெரும்பான்மை இந்துக்களுக்கு சாதகமாகத்தான் இருக்க வேண்டும், ஒரு வேளை தீர்ப்பு இந்துக்களுக்கு பாதகமாக வருமேயானால் நாங்கள் நீதி மன்றத் தீர்ப்பை புறக்கணிப்போம், அதே இடத்தில் இராமருக்கு கோவில் கட்டியே ஆவோம் என்கின்றனர் இந்துத்துவவாதிகள்.

நீதி மன்றங்களின் பெருந்தன்மை சில நேரங்களில் புல்லரிக்கவைக்கும் உணர்ச்சி மிக்க தீர்ப்புகளை தரும். அஃப்சல் குரு மீது எந்த ஒரு குற்றமும் நிருபிக்கபடாத நிலையிலும் பெரும்பான்மை மக்களின் மன திருப்திக்காக அஃப்சல் குருவினை தூக்கிலிடலாம் என்ற விசுவாசமான தீர்ப்புகளையும் நீதி மன்றங்கள் வழங்கும்.

ஆக தீர்ப்புகள் எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள தயாராகத்தான் இருக்கின்றனர். தீர்ப்பு நெருங்கும் முன்னரே இந்துத்துவ தலைவர்களின் இரத்தம் கொதிக்க வைக்கும் பேச்சுகள் தொடர்கின்றது, இது போன்ற பேச்சுகளால் தான் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டது, அதே போன்ற துவேசமிக்க பேச்சுகள் அத்வானி போன்ற இந்துத்துவ கொடுரர்களால் துவங்கப்பட்டு விட்டது, இரத்த யாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.
ஒரு வேலை தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக வந்தாலும் இஸ்லாமியர்கள் பெருந்தன்மையுடன் அதை பெரும்பான்மை இந்துக்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் எனவும் மறைமுக மிரட்டல் விடுகின்றனர் இந்துத்துவவாதிகள். விட்டுக் கொடுக்க வேண்டியது இந்த ஒரு பள்ளிவாசலை மட்டுமா?, அவர்களின் பட்டியல்களில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இடிப்புக்காக திட்டமிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் இதனை எப்படி பெருந்தன்மையுடன் விட்டு கொடுக்க முடியும்?
பள்ளிவாசல் இடிப்பு என்பது இந்துத்துவாவின் இலங்கை, நேபாளம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய அகண்ட பாரத கனவு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இராம இராஜ்ஜியம் காண்பதற்கு முன் பள்ளிவாசல்களை இடிப்பது, பிறகு இஸ்லாமியர்களின் கலாச்சார பண்பாடுகளை நாட்டில் இல்லாமல் செய்வது தான் அவர்களின் முதல் திட்டம் ஆகும்.
அதற்காகத்தான் நாடு முழுவதும் வலம் வருகிறது ரத யாத்திரைகள், மதக்கலவரங்கள், குண்டு வெடிப்புகள், அப்பாவி இஸ்லாமியர்களை சிறைச்சாலைகளில் அடைப்பதும், போலி மோதல் கொலைகளில் கொல்வதும், ரகசிய சித்திரவதை கூடங்கள் வன்கொடுமைகள் புரிவது எல்லாம்.

நாட்டில் இத்தனை வன்முறைகளையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் உட்பட இந்துத்துவ தீவிரவாதிகளை அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி தண்டிப்பதில் ஏன் இந்த தயக்கம்?..

இந்துத்துவவாதிகள் காந்தியை கொலை செய்த காலத்திலிருந்து இன்று வரை இவர்களை எந்த அரசாங்க மும் ஒன்று செய்ய முடிய வில்லை.

“காவி தீவிரவாதம்” ”என்ற ஒற்றை வார்த்தையை கூட ஒரு உள்துறை அமைச்சரால் சொல்ல முடியாத அளவிற்கு காவி தீவிரவாதம் நாடு முழுவதும் ஒரு அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு டிச6-ம் இந்திய அரசாங்கம் இதே போன்று ஒரு பதட்டத்தை முன் கூட்டியே உருவாக்கி அதன் அதிர்வுகளை நாடு முழுவதும் பரப்புகின்றது. அப்படி அரசு எதிர்பார்தது போன்று எந்த ஒரு அசம்பாவிதங்களும் இதுவரை நடந்ததே இல்லை, இருந்த போதும் இந்த பாதுகாப்பு சோதனை அச்சுறுத்தல்கள் இஸ்லாமியர்களை நோக்கியே இருப்பதால் இஸ்லாமியர்கள் மட்டுமே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் குடும்பங்கள் முழுமையான சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இந்த தொடர் சோதனை, சந்தேகங்கள் மூலம் தன் சக நாட்டு மக்களே இஸ்லாமியர்களை சந்தேகத்துடனும், அச்சத்துடனும் பார்க்கும் நிலை இயல்பாகவே உருவாகியுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் இயல்பாகவே உணர்வு மிகுதியால் கட்டுக்குள் அடங்காத போராட்டங்களினால் நாட்டினை கலவர பகுதியாக மாற்றும் சூழ்நிலைகள்தான் இருந்திருக்க வேண்டும். வேறு எந்த ஒரு மதத்தினராக இருந்திருந்தாலும் இத்தனை பெரிய இழப்பிற்கு பின் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்துவருகின்றனர்.

மக்கள் தொகையில் மிகச் சிறு கூட்டமாக இருக்கும் சீக்கியர்களின் பொற்கோயிலை அன்றைய அரசு முரட்டு அத்துமீறல்கள் மூலம் கலங்கப்படுத்தியதன் விளைவு பிரதமர் இந்திரகாந்தி வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். ஆனால் இஸ்லாமியர்களின் ஒரு பாரம்பரிய வழிபாட்டுத்தளம் மிகவும் கொடுரமான முறையில் இடித்துத் தள்ளப்பட்டும் அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மதக்கலவரங்களாலும், குண்டு வெடிப்புகளாலும் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலைகளில் கூட இஸ்லாமியர்கள் இது வரை அமைதியை மட்டுமே கடைபிடித்து வருகின்றனர். ஆனால் இதுவே ஒரு இந்துக்கோயில் தகர்க்கப்பட்டிருக்குமாயின் அதன் விளைவுகளை கற்பனை கூட செய்ய முடியாது.

ஆனாலும் இஸ்லாமியர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள். அவர்கள் மனநிலையில் பெரும் அச்ச உணர்வுடன் தான் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த அச்சுறுத்தல்கள் வெளி தேசத்திலிருந்து வருபவை அல்ல, தேச நலனுக்கு விரோதமான இந்த அச்சுறுத்தல்கள் உள் நாட்டிலிருந்து தான் கிழம்பியுள்ளன? அப்படி இருக்கும் போது முன் கூட்டியே இந்த தீவிரவாத மிரட்டல்களை முறியடிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

அரசாங்கத்தால் கட்டுபடுத்தமுடியாத அளவிற்கு உள் நாட்டு தீவிரவாதம் இருக்கும் என்றால், உள் நாட்டு மக்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு தரமுடியவில்லை என்றால் இது எப்படி ஒரு சுதந்திரமான நாடாக இருக்கமுடியும்?

இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலைகளுக்கு ஆளாகும் எல்லா சூழ் நிலைகளையும் இந்துத்துவா சக்திகள் உருவாக்கி வரும் நிலையில்,அரசாங்கம் பேராண்மையுடம் தீவிரவாதத்தின் ஆணி வேரை புடுங்கி எறிய வேண்டும், ஒரு பள்ளிவாசலை இடித்து ஒரு நூற்றாண்டுக்கு அரசியல் செய்யும் பாஜக விற்கு மதவாத துவேச அரசியலை தவிர்த்து வேறெந்த அரசியலும் தெரியாது.

வெறுப்பு அரசியலை உருவாக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், சங்கபரிவார்கள் அடங்கிய எல்லா இந்துத்துவா சக்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக இருப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் காங்கிரஸ் அரசாங்கமோ எந்த ஒரு பிரச்சனைகளையும் ஆரம்பித்து வைக்கும், அமைதி காக்கும் பிறகு சமாதானம் செய்யும் அப்படியே ஆரப்போட்டு மக்கிபோகவிட்டு அரசியல் ஆதாயம் பெரும். அது தெலுங்கான பிரச்சனையாகட்டும், காஷ்மீர் பிரச்சனையாகட்டும், பாபர் மசூதி பிரச்சனையாகட்டும் எல்லாமே ஒரே விதமான அணுகுமுறைதான். 60 ஆண்டு பிரச்சனைக்கு இப்பொழுது தான் தீர்ப்பு வந்துள்ளது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளை சந்திக்க நேரிடலாம். ஒரு வழக்கை இன்னும் எத்தனை ஆண்டுகள் இழுக்க முடியுமோ அத்தனை ஆண்டுகள் இழுத்துப் பார்க்கும் இந்த நீதி துறை.

நாளைக்கு பாரளுமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ கூட இந்த சங்கபரிவார்கள் இடித்து நொருக்கக் கூடும் அப்பொழுதும் நீதிமன்றத் தீர்ப்பு என்பது பல நூற்றாண்டுகள் கழித்து தான் வரும்.
இதற்கு இடையில் யாருக்கு தண்டனை கொடுக்க முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது எல்லாம் வெரும் கனவாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் மட்டும் தான் ஒரு மனிதன் எத்தனை கொடுமையான குற்றத்தையும் செய்து விட்டு தண்டனை அனுபவிக்காமல் இருக்க முடியும் ,அதே இந்தியாவில் மட்டும் தான் எந்த ஒரு குற்றமும் செய்யாமல் தண்டனைகளை அனுபவிக்கவும் முடியும்.

தாமதிக்கப்பட்ட வழக்குகள் மட்டும் நாட்டில் உண்டு கோடான கோடி, அவை ஒவ்வொன்றும் மறுக்கப்பட்ட நீதிகள். இந்த நீதி முறையை உலகில் எங்கும் காணமுடியாது.

பாதிக்கப்பட்ட மனிதன் நீதி கிடைக்காத போது அவன் தவறான வழிகளுக்கு செல்லும் அபாயத்தையும் நீதித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசாங்கம் திராணியற்று ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கும் நிலையில்,இந்த நாட்டில் மதசார்பின்மையை காக்கவும், எல்லோரும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு நடு நிலையாளர்கள், முற்போக்காளர்கள், மனிதம் நேசிக்கும் எல்லா மக்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும். இந்துத்துவா சக்திகளை நம் நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும்.

மால்கம் X ஃபாருக் -இராஜகம்பீரம்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

21 கருத்துகள்: on "அச்சமும் பதட்டமும் முன்னே -நீதிமன்றத் தீர்ப்பு வரும் பின்னே- பாதுகாப்பற்ற இந்தியா"

smart சொன்னது…

//அஃப்சல் குரு மீது எந்த ஒரு குற்றமும் நிருபிக்கபடாத நிலையிலும் பெரும்பான்மை மக்களின் மன திருப்திக்காக அஃப்சல் குருவினை தூக்கிலிடலாம் என்ற விசுவாசமான தீர்ப்புகளையும் நீதி மன்றங்கள் வழங்கும்///

இருப்பதிலே பெரிய வேடிக்கையாக இருக்குதே! நாடாளுமன்றத்தை தாக்கிய நபர்களின் கைபேசியில் அஃப்சல் குரு எண்ணிலிருந்து அழைப்பு சென்றிருக்கிறது. இவர் சட்டத்தால் நிருபிக்கப் பட்ட குற்றவாளி. என்று ஒரு சின்ன குழந்தைக்கே தெரியுமே உங்களுக்குத் தெரியாதா?

smart சொன்னது…

பதிவரே,
அகண்ட பாரதம் என்பது நடைமுறைப் படுத்த போகும் திட்டமில்லை, நடைமுறையுலிருந்த திட்டம். அந்நிய ஆக்கிரமிப்பாலும் உள் நாட்டு பயங்கிற வாதத்தாலும் நிலையிழந்துள்ளது இனி இதற்காக யாரும் போராடுவதில்லை இருப்பதையாவது காப்பாற்றவே போராடுகின்றனர்.என்று சொல்லிக்கொள்கிறேன்.

பாபர் மசூதி இருந்த இடம் ராமர் கோயில் உள்ள இடம் என்று தொல்லியல் துறை கண்டுப்பிடித்துள்ளது என்று ஒரு தகவல் தெரியாதா? இந்திய கோவில்களை இடித்து மசூதிகளும் தர்காக்களும் கட்டிய முகலாய ஆட்சி[இஸ்லாமியர்களை நான் குறைசொல்லவில்லை] என்பது உலகறிந்த உண்மை. மேலும் மறைக்கப் பட்ட உண்மைகள் பல அதில் தாஜ்மகாலும் ஒன்று என்பதை மறந்தவர்கள் இந்த ஹிந்துக்கள். அவர்களா அகண்ட பாரதத்தை அமைக்கப் போகிறார்கள் நகைப்பாகவுள்ளது தோழரே!

syed சொன்னது…

அப்சல் குருவின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில்
நிரூபிக்கப்படவில்லை.அப்சல் குருவிற்காக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவர்
முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷன் ஆவார்.அப்சல் குரு மீது குற்றத்தை
நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம்
ஒத்துக்கொண்டது.ஆனால் கீழ்கண்ட தீர்ப்பை வழங்கி வலதுசாரி ஆதரவாளர்களை
திருப்திப்படுத்தியது உச்சநீதிமன்றம்:the incident, which resulted heavy
casualities and shaken the entire nation.The total Conscience of the
society will be satisfied if the capital punishment is awarded to the
offender.

உண்மையை மறைக்கவியலாது என்பதை smart புரிந்துக்கொள்ளவேண்டும்.

smart சொன்னது…

//வேறு எந்த ஒரு மதத்தினராக இருந்திருந்தாலும் இத்தனை பெரிய இழப்பிற்கு பின் கொதித்து எழுந்திருப்பார்கள். //
ஒருகாலத்தில் இடிக்கப்பட்ட ராமர் கோவிலுக்கு இப்போது அவர்கள் கொதிப்பதில் நியாயம் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றிகள்

//இந்துத்துவா சக்திகளை நம் நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும்.//
மிகவும் கொடிய வார்த்தைகள். இப்படி சொல்வதால்தான் மதச்சண்டைகள் உருவாகிறது. இஸ்லாமிய சக்திகள் நாட்டில் இல்லாமல் போகவேண்டும் என்று பதிலுக்கு ஒரு ஹிந்து சார்பாக நான் சொல்லவா?

syed சொன்னது…

ஹிந்து வேறு ஹிந்துத்துவா என்பது வேறாகும்.இங்கு கட்டுரையாளர்
குறிப்பிட்டது ஹிந்துத்துவா சக்திகள் என்பதாகும்.முஸ்லிம்கள் இந்து
கோயிலை இடித்து மஸ்ஜித் கட்டினார்களா? என்பதுக்குறித்து நாளை
உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவிருக்கிறது.மேலும் இதுக்குறித்த மேல்
முறையீட்டு மனுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு
இறுதித்தீர்ப்பு வந்த பின்னரே உண்மை நிலை தெரியும்.ஆனால் பாப்ரி மஸ்ஜித்
இடிக்கப்பட்டது என்பதற்கு நிகழ்காலத்தில் ஏராளமான சாட்சிகள் உள்ளனர்.இது
சர்வதேச ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வு.

ஒற்றன் சொன்னது…

நான் சையத் அவர்களின் கருத்தை ஆமோதிக்கின்றேன். மேலும், ஸ்மார்ட் அவர்களை அப்சல் குரு விவகாரத்தில் உண்மை நிலவரங்களை அறிய கீழ உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளுமாரும் கேட்டுக்கொள்கின்றேன்.

http://justiceforafzalguru.org/background/injustice.html

ஒற்றன் சொன்னது…

Mr. Smart - Pls read the Truth about Babri Masjid

The fuss existed as a result of political conspiracies and intolerance of one religious group against another

There are historical facts that show non-existence of Ram Janmasthan temple in Ayodhya before sixteenth century. Dr Ram Saran Sharma, a noted scholar of ancient Indian history writes: “Study of the history of the Hindu beliefs leads us to the conclusion that Ayodhya became a pilgrimage centre only in the medieval times (i.e. during the Muslim rule).

Prior to that, it did not have this stature. Chapter 85 of the Vishnu Smriti gives a list of 52 pilgrimage centres including cities, tanks, rivers and hills.
Ayodhya is not among them. The smriti is supposed to have been written around 3rd century AD, and the list of pilgrimage centre’s given therein is the oldest extent. Before 16th century, there was no Ram temple in any part of Uttar Pradesh (p.20 of Hindu Updeshi. May 1990). Therefore, the allegation about the demolition of any temple is no more than a figment of imagination.
This present day distortions of the real history is nothing other than the political hegemonism and religious aggressiveness e.g. as soon as the resolution was passed in Ayodhya on June 11, 1989, Lal Krishna Advani had said, ‘I am confident that there will be shower of votes. His second statement: ‘if I had not played this triumph card, I would have lost the New Delhi constituency.’
Sushma Swaraj openly said in Bhopal that the Ram Janmabhoomi campaign was purely a political one.
There are inscriptions, which are still there despite all the negative actions in the shrine. One of them is just above the middle gate in the centre. There are almost eight couplets engraved in three lines besides the invocation Bismillah. The second line of the fifth couplet tells the name of the builder with his original home and the second line of the eighth couplet proclaims the year in which it was built.
After the praise of Allah and the Darud on the prophet, the couplets state a eulogy to Babar. Then comes the mention of the builder of the mosque Syed Moazzam Mir Baqi Asfahani with a prayer that he rewarded for the pious task accomplished by building the mosque and that his glory and greatness may be abiding so that the year 935H remains in memory.

ஒற்றன் சொன்னது…

Truth abt Babri - Continuation
Mrs. Beveridge in her translation The Babarnama in English Part II has translated only three of the couplets and left out the others. Perhaps she could not decipher the rest part of these couplets.
The other inscription was inside the mosque on the right side of the pulpit.
There was also the third inscription on the left of the pulpit.
The photocopies of all these inscriptions are available in Department of Archaeology and the established books of history.
These inscriptions establish that Mir Baqi, a commander of Babar, built the mosque in the 935H (or 1528 AD). It is called BABRI MASJID because it was built during Babar’s reign.
On looking at its topographical situation, it is evident that there was no temple on this site. There are the graves of the companions of Commander Masud Ghazi along the boundary walls of the mosque that is currently know as Ganj-i-Shahidan. It is said that Commander Masud Ghazi had come to this place in the 5th century (11th century AD).
Only just a few yards Ganj-i-shahidan there is a tomb of Qazi Qadwatuddin who a disciple of Khawaja Moinuddin Chishti Ajmeri. The Qazi had come had come and settled in Ayodhya in the sixth century. His descendants are still there living around Ayodhya and are called Qidawi.
There are number of graveyards in the very vicinity of mosque, which is a clear argument against the existence of any temple because Muslim graveyards are never found close to the temples. Beyond the graveyards, there are some Muslim colonies and in one colony, there is a home of Sheikh Nasiruddin Chiragh Delhi who was a disciple and successor of Hazrat Nizamuddin Aulia of Delhi who originally belonged to Ayodhya.
Therefore, it is very evident from the above facts that the site on which the mosque stands was always in the possession of Muslims. That is the reason for no indication of any temple-mosque dispute before the advent of East India Company.
However, the dispute about the mosque is a creation of the East India Company officials as a part of their divide and rule policy. Since then a group of communal Hindus had been always intolerant to other religions and have tried many times to demolish the very Mosque. In the intervening night of December 22-23, 1949, the mahants with the permission District Magistrate put an idol right below the arch of the mosque. Next morning when the locals came into the Mosque, they were surprised to see the Hindu idol in the mosque. Then a group of local Muslims asked the magistrate to get the idol removed but he took no action because he himself was involved in this conspiracy.

ஒற்றன் சொன்னது…

However, the dispute about the mosque is a creation of the East India Company officials as a part of their divide and rule policy. Since then a group of communal Hindus had been always intolerant to other religions and have tried many times to demolish the very Mosque. In the intervening night of December 22-23, 1949, the mahants with the permission District Magistrate put an idol right below the arch of the mosque. Next morning when the locals came into the Mosque, they were surprised to see the Hindu idol in the mosque. Then a group of local Muslims asked the magistrate to get the idol removed but he took no action because he himself was involved in this conspiracy.
This criminal act created a fuss all over India. The leaders of the Jamiat-e-ulema Hind Maulana Hussain Ahmad Madni, Maulana Abul Kalam Azad and Maulana Hifzurrehman Seoharwi personally took up the matter with the Prime Minister Jawaharlal Nehru who then wrote to the UP chief minister that the idol be removed very immediately. But unfortunately, no action was taken and the idol could not be removed despite the orders from the then Prime Minister.
Since then the dispute was in court but on entirely illegal orders the mosque was opened for Hindu worship on 25th January 1986. It is very unfortunate what foreign rulers could not do despite their anti Muslim conspiracies were done by the Indian republic and the votaries of secularism.
On 6th December 1992, over the loud speakers, the shrill voice of Uma Bharti began intoning; one blow, one more blow, the Babri masjid must go! One more blow….’ On the same day, Lal Krishna Advani picked up the mike and announced, Get off the dome quickly. And before the Liberhan Commission in 2001, they said they had gone there to protect the mosque.
Twenty minutes afternoon, the compound wall of the mosque fell. Thirty minutes after one, the main door fell.
On the dais, Advani took the mike in his hand. He just had the news that the centre had decided to send the army to block all the roads to Ayodhya… He screamed; do not let anyone enter here.
Karsevaks burnt the some parts of the mosque and fell down the first dome. In Avadh, there were nearly 30 mosques and over 400 Muslim houses, that all were singled out, looted and burnt.
The second doom fell at 4.30 pm on the same day and at 4.45 pm, the third also fell. This day all the Sadhus and the khaki wearing volunteers ran to participate in the ‘’holy act of breaking the mosque”.
The destruction that began at the noon was completed in the evening. Where once there was a historical and beautiful monument, five hours later there was only dust and debris.
Atal Bihari Vajpayee gravely said; ‘we are sorry to the nation.’
But after a few days, he changed his stance and stated: ‘This was God’s wish. In the third statement, he scolded the Muslim community: ‘if you do not respect the feelings of the Hindus, this will be the result.’
Therefore, it is clear from all the facts that the fuss existed because of political conspiracies and intolerance of Hindus against Muslim religion. How shame it is, in India not only the minors are unsafe but their religious sites are also in trouble.

Abu ubaid சொன்னது…

Mr. Smart should understand that his comments should also be smart.No independent enquiry has proved that a temple stood in the place of Babri Masjid.Moreover there is a lot of difference among Hindus regarding the exact location of Ayodhya.A research by one of the Hindu scholar states that Ayodhya is in Afghanistan!!You say that the Ahanda Bharat was in existence.Could u prove ur fact from the History?
Even a person with least knowledge knows that Afzal Guru was falsely implicated in the Parliament case.Not only Afzal there are thousands of innocents who languish in the Indian jails.
We find no mistake in the saying that Hindutuva should be wiped off from India. Lets unite against Hindutuva and save India from terrorism.

ரவி சொன்னது…

" தேர்தல் வெற்றி தோல்விகளை நாம் பெரிது படுத்தப்போவது இல்லை, நமக்கான அகண்ட பாரத கணவு என்னும் நீண்ட கால கனவுக்கான செயல் திட்டங்களிலேயே நாம் அதிகம் கவணம் செலுத்துவோம் -அத்வானி”

இது அத்வானியின் அகண்டபாரத செயல் திட்டத்திற்கான முன் அறிக்கை.

பகலவன் சொன்னது…

இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.

பகலவன் சொன்னது…

இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார். நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.

பகலவன் சொன்னது…

அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?
‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை.

மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம் சொன்னது…

இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.

பகலவன் சொன்னது…

லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பகலவன் சொன்னது…

இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.

பகலவன் சொன்னது…

உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?

இஸ்மாயில் சொன்னது…

சிறப்பு போலிஸ் உளவுத்துறையின் சதியினால் அஃபசல் குரு கைது செய்யப்படுகின்றார் -அவர்களின் சதியின் ஒரு பகுதிதான் இந்த “ சிம்” கார்டு விசயம்.
எந்த ஒரு இடத்திலும் இந்த சிம் கார்டு அப்சல் குருவுடயது தான் என்று இல்லையே..

நீங்கள் படிக்கவேண்டிய புத்தகம் “ அஃப்ஸல் குரு தூக்கிலப்பட வேண்டியவரா என்ற புத்தகம் -ஆ.மார்க்ஸ் எழுதியது”.

இந்துத்துவாக்களின் ஆத்ம சாந்திக்காக பலியிட காத்திருக்கும் ஒரு உயிர் அஃப்சல் குரு”


அஃப்சல் குரு மட்டும் மல்ல இந்திய உளவுத் துறை நினைத்தால்
அப்துல் கலாமை கூட மும்பை குண்டு வெடிப்பில் சதியில் கூட குற்றம் சாட்டப்பட்டு தூக்குக்கு தண்டனை கைதியாக நிறுத்தப்படலாம்.
இது திரு Smart க்கும் தெரியும்.
உளவுத்துறையும் இராணுவமும் உயர் பார்பணர்களின் கைகளில் இருக்கும் வரையிலும் இன்னும் ஆயிரம் அஃப்ஸல் குருக்கல் உருவாக்கப்படுவார்கள்”

பெயரில்லா சொன்னது…

பார்பனர்கள் மற்றும் உயர் சாதிய வர்கத்தினர் மட்டுமே இந்துக்கள்
மற்றவரெல்லாம் சாதிய சூழ்ச்சியில் அடிமையாக்கப்பட்டவர்களே.

Mohamed Ismail MZ சொன்னது…

மதிப்பு மிகு மிஸ்டர் ஸ்மார்ட் அவர்களே!

நீங்க ஒரு விசயத்தை கட்டாயமாக ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். வளர்ந்து வரும் வல்லரசான இந்தியாவின் தலைசிறந்த தொலைபேசி நிறுவனங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகளிலிருந்து அஃப்சல் குரு அப்படி என்னதான் பேசியிருப்பார் என்று சின்ன குழந்தைகளிடம் கேட்டுச்சொல்லுங்களேன்!

கருத்துரையிடுக