வாஷிங்டன்,செப்.2:ஷிகாகோவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஆம்ஸ்டர்டாமில் கைதான இரண்டு யெமன் நாட்டவர்கள் தாக்குதலுக்கு திட்டமிட்டார்கள் எனக் கருதவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஒரு அமெரிக்க விமானத்தில் லக்கேஜ் ஏற்றிய பிறகு பயணம் செய்யாமலிருந்த இரண்டு யெமன் நாட்டைச் சார்ந்தவர்கள் ஆம்ஸ்டர்டாம் ஸ்கிஃபோல் விமானநிலையத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்டனர்.
இவர்களில் ஒருவரின் லக்கேஜில் சந்தேகத்திற்குரிய பொருள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கண்டெடுத்திருந்த போதிலும் பயணத்தைத் தொடர அனுமதியளித்திருந்தனர்.
இரண்டுபேரும் டச்சு அதிகாரிகளின் கஸ்டடியில் உள்ளனர். குற்றஞ் சுமத்தவா? அல்லது விடுதலைச் செய்யவா? என்பதுக் குறித்து விசாரணைக்குப் பிறகு இன்று முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவர்களுக்கெதிராக வழக்கு ஒன்றும் இல்லை என்றும், எதனையும் அவசரத்தில் முடிவுச் செய்யவேண்டாம் என்றும், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் வேலையிலிருந்து ராஜினாமாச் செய்தவர் யெமனில் உள்ள வீட்டிற்கு செல்லவிருந்தவர் என கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒருவரின் வழக்கறிஞரான கியாஸ் அர்ஜன் க்ரக்கே தெரிவித்தார்.
இதுத்தொடர்பான செய்தியை வெளியிட்ட முறையையும், ஊடகங்களின் பிரச்சாரத்தையும் அவர் கண்டித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "விமானத்தில் கைதானவர்கள் நிரபராதிகள்: அமெரிக்கா"
கருத்துரையிடுக