12 செப்., 2010

ஈராக் ஆக்கிரமிப்பு:விக்கிலீக்ஸ் கூடுதல் விபரங்களை வெளியிடும்

லண்டன்,செப்.12:ஈராக்கை ஆக்கிரமிக்கும் வேளையில் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த விபரங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் விரைவில் வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.

ஈராக்குடன் தொடர்புடைய ராணுவ ஆவணங்களை உட்படுத்தி புதிய விபரங்கள் வெளியிடப்படும் என விக்கிலீக்ஸ் இணையதளத்துடன் இணைந்து பணியாற்றும் லண்டனில் 'தி பீரோ' எடிட்டர் ஐன் ஓவர்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக் குறித்த 77 ஆயிரம் ஆவணங்களை கடந்த ஜூலையில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.

ஆப்கானிஸ்தான் தொடர்புடைய மேலும் 15 ஆயிரம் ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்துள்ள விக்கிலீக்ஸ் ஈராக் ஆக்கிரமிப்புக் குறித்த ஆவணங்கள் ஆஃப்கான் ஆவணங்களை விட 3 மடங்கு அதிகமாகும் என அறிவித்துள்ளது.

ஆவணங்கள் வெளியிடுவதன் முறை தங்களுக்கு தெரியும் என ஓவர்டன் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தான் குறித்த ஆவணங்கள் வெளியானது அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதனை திருப்பித்தருமாறு அமெரிக்கா விக்கிலீக்ஸிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஈராக்கில் ஹெலிகாப்டரில் வந்த அமெரிக்க ராணுவத்தினர் பொதுமக்களை கொல்லும் காட்சியை கடந்த ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக் ஆக்கிரமிப்பு:விக்கிலீக்ஸ் கூடுதல் விபரங்களை வெளியிடும்"

கருத்துரையிடுக