22 செப்., 2010

பாகிஸ்தானில் மரணத்தின் பிடியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்

இஸ்லாமாபாத்,செப்.22:பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு கிடைக்காமல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக ஐ.நா கூறுகிறது.

ஐந்து வயதிற்கு கீழ் உள்ள 1,05,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் அவதிப்படுகின்றனர். இந்நிலைத் தொடர்ந்தால் ஆறு மாதத்திற்குள் அவர்கள் மரணத்தை நோக்கிச் செல்வார்கள். இதனை ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் கூறியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானில் உருவான வெள்ளப்பெருக்கால் 2 கோடிபேர் பாதிக்கப்பட்டனர். இதில் 1.2 கோடிபேர் அவசர நிவாரணம் தேவைப்பட்டவர்களாவர்.

வடக்கு பாகிஸ்தானில் துயரத்தை ஏற்படுத்திய பெருவெள்ளம் தற்பொழுதும் தெற்கு மாகாணத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. 1700 பேர் வெள்ளப்பிரளயத்தில் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிற்கு அவசர உதவிகளை வழங்க ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஐ.நாவின் 65 ஆண்டுகால வரலாற்றில் சந்தித்த மிகவும் பெரிய இயற்கை துயரம் என சர்வதேச அமைச்சர்களின் கூட்டத்தில் பான் கீ மூன் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் மரணத்தின் பிடியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்"

கருத்துரையிடுக