29 செப்., 2010

பாப்ரி மஸ்ஜித்:தயார் நிலையில் பாதுகாப்புப் படை

புதுடெல்லி,செப்.29:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு கூறவிருப்பதால், நாட்டின் 16 முக்கிய இடங்களில் மத்திய அரசு துணை ராணுவப் படையை நிறுத்தியுள்ளது.

தீர்ப்பைத் தொடர்ந்து தேசத்தின் எப்பகுதியில் வன்முறைகள் நிகழ்ந்தாலும் அவ்விடங்களுக்கு உடனடியாக செல்வதற்கு விதத்தில் துணை ராணுவப்படை தயார் நிலையில் உள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 32 பிரதேசங்கள் பிரச்சனைக்குரிய பகுதிகளாக உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதில் 4 உ.பி யிலாகும்.

பாதுகாப்பு ஏற்பாட்டினை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மதிப்பீடுச் செய்தார். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற ப.சிதம்பரம் செயல்பாடுகளை ஆய்வுச் செய்தார். பிரச்சனைக்குரிய பகுதிகளுக்கு துணை ராணுவப் படையை கொண்டு செல்ல விமானப்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில்
உள்ளன.

தீர்ப்பைத் தொடர்ந்து வெளியிடப்படும் பல்வேறு மத அமைப்புகளின் அறிக்கையையும் கண்காணிக்க உள்துறை அமைச்சகம் மாநிலங்களிடம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பைக் குறித்த ஊகமான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:தயார் நிலையில் பாதுகாப்புப் படை"

irainesan சொன்னது…

The only possible solution to this complex issue is to rebuild the mosque in its original site ( on the one-third given to Muslims) and at the same time allow the Hindus to build a huge temple for their god Ram on the other one-third area given to them.

Hindus should understand that an asset obtained under duress will humiliate Muslims and intoxicate communalists like Bal Thackeray and Togadia. It will destroy Muslims' confidence in secular India and make them feel they live in the country under sufferance. RSS and BJP and my Hindu brothers should realize that my forefathers were Hindus too. A change of ideology does not deprive me of my rightful share in my motherland.

கருத்துரையிடுக