1 செப்., 2010

அப்பாஸ் அழிந்துபோக விரும்புவதாக யூதமதப் புரோகிதர்

டெல்அவீவ்,செப்.1:ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உலகத்திலிருந்து காணாமல் போக விரும்புவதாக இஸ்ரேல் ஆளும் கட்சியைச் சார்ந்த மூத்த யூத புரோகிதர் ஒருவர் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் மஹ்மூத் அப்பாஸும், நெதன்யாகுவும் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கவே ஷாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவரான ரப்பி உவைத் யூஸஃப் இவ்வுரையை நிகழ்த்தியுள்ளார்.

இவ்வறிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. ஃபலஸ்தீனர்களுடன் தாங்கள் சமாதானத்தைத்தான் விரும்புவதாக கூறி நழுவினார் நெதன்யாகு.

தனது வாராந்திர மத உரையில்தான் புரோகிதர் யூஸஃப் உணர்ச்சியைத் தூண்டும் உரையை நிகழ்த்தியுள்ளார்.

அவர் கூறியதாவது:"அப்பாஸைப் போன்ற அனைத்து மோசமானவர்களும் இந்த உலகிலிருந்து தொலைந்துபோக நான் விரும்புகிறேன்.இறைவன் அவர்களின் மீதும், இஸ்ரேலை எதிர்க்கும் அனைத்து ஃபலஸ்தீனர்கள் மீதும் பரவும் நோயை ஏற்படுத்த வேண்டும் என உரை நிகழ்த்தினார்.

இனப் படுகொலைக்கு தூண்டும் உரை இது என ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸஈஃப் எரகாத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு அரபுகள் அனைவரையும் அழிக்கவேண்டும் என உரைநிகழ்த்தியவர்தான் உவைத் யூஸஃப்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்பாஸ் அழிந்துபோக விரும்புவதாக யூதமதப் புரோகிதர்"

கருத்துரையிடுக