17 அக்., 2010

ஆ;ப்கானில் 11 நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

காபூல்,அக்.17:தெற்கு ஆஃப்கானில் ஹெல்மந்த் மாகாணத்தில் நேற்று நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் 11 நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்நிய ஆக்கிரமிப்பு படையினரும், ஆப்கான் ராணுவத்தினரும் இணைந்து நடத்தும் ராணுவ மையத்தில்தான் தாலிபான் போராளி ஒருவர் குண்டுகளை வெடிக்கச்செய்தார் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டது. அவ்வமைப்பின் செய்தித்தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கான்ஷின் மாவட்டத்தில் ராணுவ மையத்தில் நடந்த தாக்குதலில் ஒரு ஆஃப்கான் போலீஸ்காரர் கொல்லப்பட்டதாக மாகாண போலீஸ் தலைவர் அஸதுல்லாஹ் ஷெர்ஷாத் தெரிவிக்கிறார். வெடிக்குண்டை கட்டிவந்த போராளியை கைதுச் செய்ய முயன்றபொழுது அவர் வெடித்து சிதறினார் என அவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் 3 நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். 2001 ஆம் ஆண்டு ஆஃப்கானை ஆக்கிரமித்த பிறகு நேட்டோ படையினருக்கு உயிரிழப்பு அதிகமான ஆண்டாக 2010 மாறிவிட்டது.

580 அந்நிய ராணுவத்தினர் இவ்வாண்டு கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே, காந்தஹாரில் ஆயுத தாங்கிய குழுவினர் நடத்திய தாக்குதலில் பழங்குடியின தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். அரசு வட்டாரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காபூலுக்கு வருகைத்தர தாலிபான் கமாண்டருக்கு வசதி வாய்ப்புகளை ஏற்பாடுச் செய்துள்ளதாக நேட்டோ கமாண்டர் டேவிட் பெட்ரோஸ் லண்டனில் தெரிவித்தார்.

அதிபர் ஹமீத் கர்ஸாயியின் சமாதான முயற்சிகளின் ஒரு பகுதிதான் இந்த பேச்சுவார்த்தை என அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆ;ப்கானில் 11 நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்"

கருத்துரையிடுக