1 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித்:தீர்ப்பைக் குறித்து சட்டவல்லுநர்களிடையே கருத்துவேறுபாடு

புதுடெல்லி,அக்.1:அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைக் குறித்து சட்டவல்லுநர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பகுதியை மூன்று பங்காக பிரிக்க கூறும் நீதிமன்றத் தீர்ப்பை சிலர் வரவேற்கும் வேளையில், வேறுசிலர் இத்தீர்ப்பைக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷன், நீதிமன்றத் தீர்ப்பு மதசார்பற்றத் தன்மையையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட உதவும் என கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசியல் சட்ட வல்லுநரான ராஜீவ் தவான் இத்தீர்ப்பைக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பு ஹிந்து பிரிவினர்களுக்கு ஆதரவானது எனவும், முஸ்லிம்களுக்கு நிலத்தின் ஒருபகுதியை வழங்குவதற்கான தீர்மானம் கருணை காண்பிப்பது போன்ற நடவடிக்கை எனவும் தவான் கூறியுள்ளார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞரான பி.பி.ராவ் நீதிமன்றத் தீர்ப்பு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு முறையை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், நீதிபதிகள் சர்ச்சைக்குரிய நிலம் இரு பிரிவினருடைய வழிபாட்டுத்தலம் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதாகவும், அதனால் மூன்று பங்காக பிரிக்க முடிவெடுத்ததாகவும் முன்னாள் சோலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:தீர்ப்பைக் குறித்து சட்டவல்லுநர்களிடையே கருத்துவேறுபாடு"

கருத்துரையிடுக