4 அக்., 2010

மன உளைச்சலில் உறைந்துள்ள காஸ்ஸா குழந்தைகள்

காஸ்ஸா,அக்.4:இருபது மாதங்களுக்கு முன்பு கொடுங்கோல் இஸ்ரேல் நடத்திய போரினாலும் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல்களினாலும் காஸ்ஸாவின் குழந்தைகள் மனஉளைச்சலில் உறைந்து இருப்பதாகவும் இவ்வாறு குழந்தைகள் மன உளைச்சளினால் சோர்வுடன் இருப்பது கவலைக்குரியது என்றும் சமீபத்தில் காஸ்ஸாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மன நல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

"சியோனிஸ்டுகளின் போருக்கு பின் காஸ்ஸா குழந்தைகளிடம் ஏற்பட்ட சமூக மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உரையாற்றிய உளவியல் நிபுணர் அப்துல் அஜீஸ் தாபித், போரின்போது குழந்தைகளை பாதுகாப்பதிலும் அவர்களின் மறுசீரமைப்பிலும் சர்வதேச அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

குத்ஸ் திறந்தநிலை பல்கலைகழக ஆய்வாளர் முனைவர் சுகைல் தியாப் கூறுகையில், ஃபலஸ்தீன மக்கள் கல்வியறிவற்றவர்களாக மாற வேண்டும் என்ற கொடுங்கோல் இஸ்ரேலின் கொடிய எண்ணத்தினை அவர்கள் போரின்போது கல்வி நிலையங்களை குறிவைத்து தாக்கியதிலிருந்து நாம் அறியலாம். மேலும் குழந்தைகளை மன உளைச்சலில் இருந்து விடுவிக்க கல்வி கற்பது உதவும் எனவும் அவர் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மன உளைச்சலில் உறைந்துள்ள காஸ்ஸா குழந்தைகள்"

கருத்துரையிடுக