7 அக்., 2010

டெல்லியிலிருந்து காஸ்ஸாவுக்கு நிவாரணக் கப்பல்

புதுடெல்லி,அக்.7:இஸ்ரேலின் தடையின் காரணமாக துயரத்தை காஸ்ஸாவின் ஃபலஸ்தீன் மக்களுக்கு உதவும் நோக்கில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா உட்பட 17 ஆசிய நாடுகளின் மனித உரிமை ஆர்வலர்களைக் கொண்ட கப்பல் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி காஸ்ஸாவிற்கு செல்கிறது. இதன் தொடக்கம் டெல்லியிலிருந்து ஆரம்பமாகிறது.

இஸ்ரேல் காஸ்ஸா மீது விதித்திருக்கும் தடையை மீறுதல், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் கருத்துக்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புறப்படுகிறது கப்பல்.

17 நாடுகளிலிருந்து 500 அமைதிப் பணியாளர்கள் இந்த கப்பலில் செல்வர். பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளைச் சார்ந்த 18 நகரங்களுக்கு இக்கப்பல் பயணத்தின் பொழுது வருகை தரும்.

காஸ்ஸாவிற்கு தேவையான நிவாரணப் பொருட்களுடன் இக்கப்பல் புறப்படுவதாக அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவிலிருந்து புறப்படும் இக்கப்பல் இரண்டு மாதம் பயணத்தை தொடரும். பயணத்தின் பொழுது வருகை தரும் நகரங்களில் இரண்டு அல்லது 3 தினங்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கப்பல் குழுவினர் பங்கேற்பர்.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஃபலஸ்தீனுக்கு ஆதரவளித்த போதிலும், இந்தியா இஸ்ரேலுடன் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என முன்னாள் எம்.பி.ஷாஹித் சித்தீகி குறிப்பிட்டுள்ளார்.

காஸ்ஸாவில் தடையை மீறுவது குறுகியகால லட்சியம் எனவும், நேட்டோவுக்கெதிராக மக்களின் கூட்டமைப்பை ஏற்படுத்துவது நீண்டகால லட்சியம் எனவும் ஏசியன் கூட்டமைப்பு கவுன்சிலின் ஃபிரோஸ் மிதிபொர்வால தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெல்லியிலிருந்து காஸ்ஸாவுக்கு நிவாரணக் கப்பல்"

கருத்துரையிடுக