காபூல்,அக்.13:கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏழுபேருக்கு காயம் ஏற்பட்டது. இத்தாக்குதலுக்கு பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டுள்ளது.
மரணித்தவரைக் குறித்து நேட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், காயமடைந்த ஏழுபேரும் ராணுவவீரர்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டர் ராணுவ தளத்தில் இறங்கியவுடனேயே குண்டுவெடித்தது.
கிழக்கு ஆப்கானிஸ்தான் தாலிபானின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கும் பொழுது அதில் 26 பேர் இருந்தனர். முன்னர் இத்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு 10 பேருக்கு காயம் ஏற்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குள்ளான ஹெலிகாப்டர் அமெரிக்க தயாரிப்பான சினூக் ஆகும்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலையோரத் தாக்குதலில் இரண்டு நேட்டோ ராணுவத்தினர் உட்பட ஏழுபேர் கொல்லப்பட்டனர். இம்மாதம் இதுவரை 26 அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் ஆப்கானில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தாலிபான் தாக்குதலில் அமெரிக்க ஹெலிகாப்டர் வீழ்ந்தது"
கருத்துரையிடுக