6 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்தது ஆபத்தானது - சிபிஎம் பொலிட் பீரோ

புதுடெல்லி,அக்:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் உண்மைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "தீர்ப்பை மக்கள் எதிர்கொண்டவிதம் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், ஆதாரங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளாமல் நம்பிக்கைக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்தது கவலையை அளிக்கிறது. இத்தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும்.

பாப்ரி மஸ்ஜிதை இடித்தது கிரிமினல் குற்றமும், மதசார்பற்ற கொள்கையின் மீதான தாக்குதலுமாகும். இவ்விஷயம் நீதிமன்றத்தின் கவனத்தில் வராவிட்டாலும் கூட மஸ்ஜிதை தகர்த்தை நியாயப்படுத்தும் விதமாகவே நீதிமன்றத் தீர்ப்பு புரிந்துக் கொள்ளப்பட்டது.

மஸ்ஜித் இடிப்புத் தொடர்பான வழக்குகளை கையாளும் நீதிமன்றங்கள் இதனை மிக கவனத்தில் கொள்ளவேண்டுமென பொலிட் பீரோ வலியுறுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலத்தை 3 ஆக பிரித்து அளிக்கும் தீர்ப்பைத் தொடர்ந்து பிரம்மாண்டமான கோயிலை கட்டுவதுத் தொடர்பாகத்தான் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம் எனக்கூறுவோர் கூட மஸ்ஜித் கட்டுவதைக் குறித்து மெளனம் சாதிக்கின்றனர்.

பொலிட் பீரோ கூட்டத்தின் தீர்மானங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாரஷ் காரட் விளக்கினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்தது ஆபத்தானது - சிபிஎம் பொலிட் பீரோ"

கருத்துரையிடுக