இஸ்லாமாபாத்,அக்.17:அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உர்துகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானிற்கு சுற்றுப் பயணமாக சென்றுள்ள உர்துகான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும் பொழுது இதனை தெரிவித்தார்.
காஸ்ஸாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் குறித்து விமர்சிக்கும் பொழுது இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார் உர்துகான்.
அவர் மேலும் கூறியதாவது:
"இஸ்ரேலின் பயங்கரவாதத்தை பகிரங்கமாக ஆதரிக்கிறது அமெரிக்கா. இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் துப்பாக்கிகளிலிருந்து வெளியான 21 தோட்டாக்கள் எங்கள் நாட்டவர்கள் 9 பேரை இரத்த சாட்சிகளாக்கியது. இறந்து போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் போஸ்ட்மார்டம் அறிக்கைகளை அமெரிக்காவிற்கு அனுப்பிக் கொடுத்துள்ளோம். ஆனால், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்க அமெரிக்க அரசு தயாரில்லை.
சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்னொரு நாட்டு குடிமகன்களை சுட்டுக்கொன்ற நாடு பயங்கரவாத இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது.
பாகிஸ்தானும், துருக்கியும் ஒருபோலவே ஏகாதிபத்திய நாடுகளால் அவதிக்குள்ளான நாடுகளாகும். இந்த ஏகாதிபத்தியவாதிகளை அமெரிக்கா ஆதரித்திருந்தது." இவ்வாறு உர்துகான் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பயங்கரவாதத்திற்கு அமெரிக்கா ஆதரவு தருகிறது: உர்துகான்"
கருத்துரையிடுக