20 அக்., 2010

குஜராத் இனக் கலவரம்:குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் ஆன்லைனில்

மும்பை,அக்.20:2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏராளமான முஸ்லிம்களைக் கொலை செய்து இன சுத்திகரிப்பு நடத்திய சங்கபரிவாரங்களுக்கு எதிரான வழக்குகளில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து முக்கிய பங்காற்றி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (The Citizens for Justice and Peace)" தான் இதுவரை இந்த இந்து தீவிரவாதிகளுக்கு எதிராக திரட்டிய மொத்த ஆதாரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.

தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது. ஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம். மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம். அதில் புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை http://www.gujarat-riots.com/ என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் எடுத்துவரும் இதுபோன்ற முயற்சிகளால் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கீழ்காணும் முக்கிய ஆவணங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன:

* தேசிய மனித உரிமை கழகத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கை
* தேசிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* உச்ச நீதிமன்றம் மற்றும் பிரத்தியோக விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகள்
* கலவர நேரத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள். அதில் யார் யாருடன் பேசினர், கலவர நேரத்தில் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரம்
* மாநில அரசு தெரிவித்த நிவாரண பணிகள் மற்றும் புணர்நிர்மான, மறுவாழ்வுக்கான பணிகளுக்கான அறிக்கைகள்
* முன்னாள் மாநில உளவுத்துறை தலைவர் RB ஸ்ரீகுமாரின் சட்டபூர்வ ஒப்புதல் அறிக்கைகள் (affidavits) அதன் மற்ற இணைப்புகள்

தேசிய அவமானமாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கையை குஜராத் மாநில அரசாங்கம் தான் ஆசீர்வதித்து முன்னின்று நடத்தியது என்பதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதா? என்று அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய எங்களின் தொடர் முயற்சி வெகு விரைவில் விடை கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு முறையான நீதி வழங்கப்படுமா என்பதை இப்போது நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாப்போம் என்றும் "இந்திய தேசத்தின் நீங்கா அவமானமாக நிலைபெற்றுவிட்ட இந்த கருப்பு நாட்களை நேர்மையோடு விசாரித்து நீதிவழங்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பிற்கு நீதியை நிலைநாட்டும் நேர்மையும் தைரியமும் உண்டா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத் இனக் கலவரம்:குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் ஆன்லைனில்"

கருத்துரையிடுக