12 அக்., 2010

சர்வதேச அளவில் மக்கள் பட்டினியால் வாழும் நாடுகளின் பட்டியல் -இந்தியாவின் நிலை பாகிஸ்தானை விட மோசம்

புதுடெல்லி,அக்.12:சர்வதேச உணவு கொள்கை ஆய்வு மையத்தின் IFPRI (International Food Policy Research Institute) சர்வதேச அளிவிலான பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை அயல்நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானைவிட மோசமாக உள்ளது.

புதிய ஆய்வின் படி இந்தியாவின் நிலை 67-வது இடமாகும். 84 நாடுகளின் பட்டியலை நேற்று சர்வதேச உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டது.

குழந்தைகளின் ஆரோக்கிய பாதுகாப்பு, சிசு மரணம், மக்களின் கலோரி வித்தியாசம் தொடர்பானவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரானது.

ஜெர்மனியிலுள்ள ஒரு அமைப்பின் உதவியுடன் IFPRI 2010 இல் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் சீனா ஒன்பதாவது இடத்தையும், பாகிஸ்தான் 52-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவில் பெண்களின் சமூக சூழலும், ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் அதிகளவில் குழந்தைகளின் எடைக் குறைவும்தான் இந்தியாவின் நிலை பின்தங்குவதற்கு காரணமாகும்.

புதிய அறிக்கையின் படி உலகத்தில் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளைக் கொண்ட நாடு இந்தியாவாகும். அத்தகைய குழந்தைகள் 42 சதவீதம் இந்தியாவில் உள்ளனர். பாகிஸ்தானிலோ இது 5 சதவீதம் மட்டுமே.

ஒரு குழந்தையின் முதல் இரண்டு வருடங்களில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாடு உடல்ரீதியான மரபணுரீதியான வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கும். ஆதலால், பட்டினியை மாற்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என IFPRI இன் அறிக்கை கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்வதேச அளவில் மக்கள் பட்டினியால் வாழும் நாடுகளின் பட்டியல் -இந்தியாவின் நிலை பாகிஸ்தானை விட மோசம்"

கருத்துரையிடுக