புதுடெல்லி,அக்.20:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு கிராமத்தை அமைத்த ஒப்பந்தக்காரர்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக விளையாட்டு மைதானங்கள், கட்டடங்கள் பலவற்றைக் கட்டுவதற்கு பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. போட்டி ஏற்பாடுகளில் ஊழல் நடந்துள்ளதாக வந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக கட்டப்பட்ட மைதானங்களின் ஒப்ப்ந்தங்கள் யார் யாருக்கு கொடுக்கப்பட்டது, இதில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர்கள் யார், இதில் அரசு அதிகாரிகளின் பங்கு என்ன என்பது தொடர்பாக சமீபகாலமாக வருமான வரித்துறையினர் விசாரித்து வந்தனர். இதில் சுமார் 700 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியின் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 200 பேர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
டெல்லி மட்டுமல்லாமல் சண்டீகர், லூதியாணா ஆகிய நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது. போட்டிக்காக மைதானங்களைக் கட்டிய 4 பெரிய கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.
மிட்டல்:மைதானம்ம் கட்டுவதற்காக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சுதன்ஷு மிட்டல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இதன்மூலம் கிடைத்த வருவாயில் அவரது நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து மிட்டல் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மிட்டல் அலுவலகம் மற்றும் அவரது உறவினர் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். சோதனையின்போது அங்கிருந்து பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
விளையாட்டு போட்டிக்கான மைதானங்கள் கட்டப்பட்டது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் அவை என்பது தெரியவந்துள்ளது.
சுதன்ஷு பாஜக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் மறைந்த தலைவர் பிரமோத் மகாஜன் ஆகியோரின் நெருங்கிய நண்பர் மிட்டல் என்பது தெரியவந்துள்ளது.
பிகோ இன்டர்நேஷனல் அண்ட் தீபாலி டிசைன்ஸ் நிறுவனம், ஜி.எல் லிட்மஸ் அண்ட் மெரோபார்ம் கன்சோர்டியம், கம்போர்ட் நெட் அண்ட் நுஸ்லி இந்தியா கன்சோர்டியம், இஎஸ்ஜி அரேனா அன்ட் டி-ஆர்ட் ஃபர்னிச்சர் ஆகிய 4 நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலகங்களில் சோதனை நடந்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் பிகோ இன்டர்நேஷனல் அண்ட் தீபாலி டிசைன்ஸ் நிறுவனத்தில் சுதன்ஷு மிட்டல் இயக்குநராக உள்ளார்.

0 கருத்துகள்: on "காமன்வெல்த் போட்டி:ஒப்பந்தக்காரர்கள் அலுவலகங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை"
கருத்துரையிடுக