இஸ்லாமாபாத்,அக்:ஏராளமானோரின் உயிரைப் பறித்த வெள்ளப் பிரளயம் ஏற்படுத்திய துயரத்தால் பாகிஸ்தானில் ஒன்றரைக் கோடி மக்கள் அவசர உதவிகள் கிடைக்காமல் அல்லலுறுகின்றனர்.
70 லட்சம் பேருக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசினாலோ, சமூக சேவை நிறுவனங்களாலோ இயலவில்லை. ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் பல வாரங்கள் தாண்டிய நிலையில் முகாம்களில் வாழும் பெரும்பாலோர் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை அளிக்க ஐ.நா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், சர்வதேச சமூகம் இதற்கு போதிய அளவில் பதிலளிக்கவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கைப் பேரழிவு என இந்த வெள்ளப்பிரளயம் வர்ணிக்கப்படுகிறது. தெற்கு சிந்து மாகாணத்தைச் சார்ந்தவர்கள்தான் இந்த பெருந்துயருக்கு ஆளாகியுள்ளனர்.
அடிப்படை வசதிகள் கிடைக்காததால் முகாம்களின் நிலைமை மோசமாக உள்ளது என செய்திகள் கூறுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் துயரத்தில் ஆழ்ந்துள்ள ஒன்றரைக் கோடி மக்கள்"
கருத்துரையிடுக